பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அறிவுநூல் திரட்டு.

கல்லீரும் படைத்தடக்கை யடற்காது டணர்முதலா அல்வீரும் சுடர்மணிப்பூண் அரக்கர்குலத் தவதரித்தீர் : கொல்லீரும் படைக்கும்ப கர்ணனைப்போல் குவலயத்துள் எல்லீரும் உறங்குதிரோ யானழைத்தல் கேளிரோ! 23. W. பிரபந்தப் பகுதி. 1. மீனுகூஷியம்மை குறம். இதனை இயற்றிய ஆசிரியர் குமாகுருபாசுவாமிகள். இவரது சரிதக் குறிப்பை, முன் தோத்திரப்பகுதியிற் காண்க. இப்பாடல் களில் குறத்திகள் பெண்களுக்குக் குறிசொல்லும் வழக்கமும் குறிஞ்சிநில இயற்கை அழகும் இயற்கைச்சுவைகனிய விரிக்கப்பட் டுள்ளன. இப்பாடல்கள், சிந்து என்னும் ஒருவித இசைப்பா வகையைச் சேர்ந்தவை,

குறத்தி தன் மலைச்சிறப்புக் கூறுதல். (சிந்து) திங்கள்முடி சூடுமலை; தென்றல்விளே யாடுமல; தங்குமுயல் குழுமலை; தமிழ்முனிவன் வாழுமலை; அங்கையற்கண்ணம்மைதிரு அருள்சுரந்து பொழிவதெனப் பொங்கருவி துங்குமலை; பொதியமலை என்மலையே. (1) (வேறு சந்தம்) கன்ன மதம்பெய் துறங்குகொலைக்

களிறு கிடந்து பிளிறுமலை; தென்னங் தமிழும் பசுங்குழவித்

தென்றற் கொழுந்தும் கிளேக்குமலை; அன்னம் பயிலும் பொழிற் கூடல்

அறல்அங் கூந்தற் பிடியாண்ட பொன்னங் குடுமித் தடஞ்சாரல்

பொதிய மலையென் மலையம்மே. (2)