பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்துறைப் பகுதி. 79

10. மக்கட்பேறு. கல்லாமழலைக்கணியூறல் கசிந்து கொஞ்சும் சொல்லால் உருக்கி அழுதோடித் தொடர்ந்து பற்றி மல்லார் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர் இல்லா தவர்க்கு மனைவாழ்வின் இனிமை என்னும்.18 வில்லிபுத்துனார்.

பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை,மேவத் துறையிலா வனசவாவி, துகில் இலாக் கோலம், தூய்மை கறையிலா மாலை, கல்வி நலமிலாப் புலமை, நன்னர்ச் சிறையிலா நகரம்போலும் சேயிலாச் செல்வம் அன்றே.19 வளையாபதி. 11. பொருண்மொழிக் காஞ்சி. தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை கிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழி உடுப்பவை இரண்டே. பிறவு மெல்லாம் ஒரொக் கும்மே; செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்பு பலவே. 20 நக்கீார். 12. கல்விச் சிறப்பு. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே. பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும். ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்