பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அறிவுநூல் திரட்.ே

மூத்தோன் வருக வென்ன தவருள் அறிவுடையோ(ைறு) அரசுஞ் செல்லும். வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. 21. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். 18. அறவுரை. பரிவும் இடுக்கனும் பாங்குற நீங்குமின்; தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்; பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்; ஊன்ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தான்ஞ் செய்மின்; தவம்பல தாங்குமின்; செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட்பு இகழ்மின்; பொய்க்கரி போகன்மின்; பொருள்மொழி நீங்கன்மின், அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்; பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்; பிறர்மனே அஞ்சுமின்; பிழையுயிர் ஒம்புமின்; அறமனை காமின்; அல்லவை கடிமின்; கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்; இளமையும், செல்வமும், யாக்கையும் கிலேயா, உளநாள் வரையாது; ஒல்லுவ தொழியாது; செல்லுக் தேனத்துக் குறுதுணை தேடுமின்; மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென. 23.

இனங்கோவடிகள்.