பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தனிப்பாடற் பகுதி. 83

முருகக்கடவுள் மீது கிந்தாஸ்து கி.

அப்பன் இரந்துண்ணி யாத்தாள் மலைநீலி ஒப்பரிய மாமன் உறிதிருடி-சப்பைக்கால் அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தான்ுக்கிங் எண்ணும் பெருமை இவை. 8

விகடராமன் குதிரையைப் பற்றிப் பாடிய ஆசிரியம்.

முன்னே கடிவாளம் மூன்றபேர் தொட்டிழுக்கப் பின்னே இருந்திரண்டு பேர்தள்ள-எந்நேரம் வேதம்போம் வாயான் விகடரா மன்.குதிரை

மாதம்போம் காத வழி. 9.

போவாள் வருவாள் புகுவாள் என்று பாடுகவெனப் பாடியது.

செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில் வெற்றிபுரி யும்வாளே வீாவாள்-மற்றையவாள் போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்

ஆவாள் இவாளவா ளாம். 10

பொன்னவரை இலை காய்பூ எனப் பாகெவெனப் பாடியது.

உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் றன்னுல் எடுத்ததுவும் பள்ளிக் கியையப்-படுத்ததுவும் அங்கா ளெறிந்ததுவும் அன்பின் இறந்ததுவும் பொன்ன வரையிலேகாய் பூ. | 1