பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்புரை.

கடவுள் வணக்கம்

வேதமும்-நான்கு வேதமும், பஞ்சபூதம்-பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம். புலன்-பஞ்சபுலன், சுவை, ஒளி, ஊது, ஒசை, நாற்றம். ஞாதம்-காண்டான்.

1. தோத்திரப் பகுதி.

1. தாக்கும்-ஆராயும். பனுவல்-நூல்கள். தேக்கும்-நிறை கின்ற.

2. தீட்டும்-எழுதுகின்ற, ஒதிமம் பேடு-பெட்டைஅன்னம்

3. விற்பனம்-பாண்டித்யம். அவதான்ம்-ஞாபகசக்தி, நளின ஆதனம்-தாமாையாசனம்.

5. உன் வயிற்றில் பிறந்து-உன்னிடமாகப் பிறந்து, ஒன்று பல ஆயிடினும்-ஒரு பாஷை பலவாக விகற்பப்பட்டாலும். உலக வழக்கு-பேச்சுவழக்கு. கடல்குடித்த குடமுனி-அகத்தியர். அகத் தியர் தென்னுட்டில் செல்லக் கட்டளை பெற்றபோது சிவபிரானி டத்தில் தமிழ் அறிவுறுத்தப் பெற்ருர் என்பது புராண வரலாறு. (காஞ்சிப்புராணம், இராமாயணம், திருவிளையாடல்) இதுபற்றிக் குடமுனி........குருநாடில் எனப்பட்டது. தொகெடல்-தோண் டப்பட்ட கடல், (வினைத்தொகை.)

ஒரு பிழைக்கா-'கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் பாசுரத் தில் நக்கீசர் காட்டிய ஒரு பொருட்பிழைக்காக. விழிப்பாரேல்காட்டிய பிழையை மதுக்கும் வழி தோன்ருது விழிப்பாசானல், இதில் கோபத்தால் நெற்றிக்கண்ணின் தீயெழ விழிப்பாராயின் என மற்றுமொரு பொருளும் தொனிக்கவைத்துள்ளமையறிக. இவ்விரண்டடியின் வரலாறு திருவிளையாடலில் தருமி கதையில் காண்க. சதுமறை ஆரியம்-கான்கு வேதமும், வடமொழியும், ஆரியர் இந்தியாவில் குடியேறுமுன் தமிழர் இந்தியா முழுதும்