பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பாப் பகுதி. 5

'நாலாயிரத் திவ்ய பிரபந்தம் எனப்படும். இது முதலாயிரம், பெரிய திருமொழி, இயற்பா, திருவாய்மொழி என நான்கு பிரி வினை யுடையது. அவற்றுள் கீழே காணும் பகுதி இயற்பாவின் பிரிவில் முதற்றிருவந்தாதி ஆகும். இது நூறு வெண்பாக்களால் அந்தாகித் தெர்டையாய் அமைந்தது. அந்தாதி-முதற் பாட் டின் ஈற்றடியின் ஒர் எழுத்தையேனும் அசையையேனும் சொல்?ல. யேனும் சீரையேனும் அவ் அடியையேனும் அடுத்த செய்யுளின் முதலாக வரவைத்துத் தேவர்க்காயின் நூறு பாட்டளவில் பாடப் படுவது. (அந்தம் +ஆதி=அந்தத்தை ஆதியாக-வைத்துப் பாடப் படுவது) இது தமிழிலுள்ள தொண்ணும்முறு வகைப் பிரபந்தங் களுள் ஒன்று. இது தொல்காப்பியர் கூறிய யாப்பினுள் விருத்து’ என்ற பகுதியுள் அடங்கும்

இதனை அருளிச்செய்தவர், ஆழ்வார்கள் பன்னிருவருள் முத லாழ்வார்கள் எனக் கூறப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ் வார், பேயாழ்வார் என்பவருள், பொய்கையாழ்வார் ஆவர். இவர் தொண்டைநாட்டைச் சேர்ந்த போய்கைநாட்டில் அவதரித்தவ சாகையால், பொய்கையார் என வழங்கப்பட்டார். இவர் உடன் காலத்தவர் பூதத்தாழ்வார், பேயாழ்வார், கிருமழிசையாழ்வார். புறநானூற்றுப் பாடல்களிற் சிலவற்றையும், களவழி நாற்பதை யும் பாடிய சங்கப்புலவர் ஒருவர் பொய்கையார் என்னும் பெய ருடையாாக அறியப்படுகிருர். அவரும், இவரும் ஒருவாே என ஒரு சாராரும், அவர் வேறு, இவர் வேறு என ஒரு சாராரும் கூறு வர். இவர் காலத்தைச் சங்கப்புலவரே இவர் என்பார். கி.பி. இாண் டாம் நூற்ருண்டென்றும், வேறென்பார் பல்லவர் காலமாகிய நான்காம், எட்டாம் தாம்முண்டின் இடைப்பட்ட காலமென்றும் (ஏழாம் நூற்ருண்டு) கூறுவர். இவர்பாடல்கள் விஷ்ணுவுக்கும், சிவனுக்குமுள்ள ஒருமைப் பாடு கூறி, விஷ்ணுவுக்குப் பாத்துவங் கற்பித்துப் பத்திச்சுவை மலிந்து, சிறுசிறு சொற்களாலாகித் திட்ட துட்பஞ் செறிந்து விளங்குகின்றன. இவ்வாழ்வாாது வெண்பா நடை பாரதவெண்பா, நளவெண்பா என்ற வெண்பாக்களின் கடையினும் சிறந்து செந்தமிழ்வளம் தேக்கப்பெற்றது.