பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்டாப் பகுதி. f

2. இரண்டாம் திருவந்தாதி. இதனை அருளிச்செய்தவர் பூதத்தாழ்வார். இவர் அவதரித்த திருப்பதி திருக்கடல்மல்லை. இவர் பக்தி, ஞான, வைாக்கிய மிக்க வர். இவர் பாடல்கள் சிறுசிறு சொற்களாலாகிப் பெருகிய பொ ருள்களைத் தம்முட்பொதிந்து திகழ்கின்றன. பத்திச்சுவை கனிந்து மிளிர்கின்றன. இவரது காலம் பொய்கையார் காலம். இவர் தமிழ்மொழியில் மிக்க பற்றுள்ள முடையவர். தமிழை ஞானத்தமிழெனவும், தம்மைத் பெருந்தமிழன்’ எனவுங் கூறி யிருத்தலே நோக்குக. இவ்வங்தாதி இயற்பாவின் பிரிவுள் ஒன்று.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை யிடுதிரியா-நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான். 1. அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றிப் பெருக முயல்வாாைப் பெற்ருல்-கரியதோர் வெண்கோட்டு மல்யானே வென்று முடித்தன்றே தண்கோட்டு மாமலாால் தாழ்ந்து. 2. பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று இருகண் இளமூங்கில் வாங்கி-அருகிருந்த தேன்கலந்து சீட்டும் திருவேங் கடம்கண்டீர்

வான்கலந்த வண்ணன் வாை.

3.

அத்தியூ சான்புளளே யூர்வான் அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான்-முத்தி மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் தனக்கும் இறையாவான் எங்கள் பிரான். 4.

3. திருமொழி. இது நாலாயிரத் திவ்யபிரபந்தத்துள் முதலாயிரம் என்ற பகுதியுள் அடங்கியது. இதனை அருளிச்செய்தவர் விஷ்ணுசித்த