பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 151

2. சேரநாடு,

5. அள்ளல் பழனம் - சேற்றையுடைய வயல்கள். பார்ப்பு ஒடுக்கும் - குஞ்சுகளை அணைக்கும்; (பார்ப்பு மரபுப்பெயர்) கவ்வைதுன்பத்தாலுண்டாகும் பேரொலி, அரோ, அசை. நச்சு . நஞ்சு, விகாரம். இலைவேல் - இலவடிவினதான் வேலாயுதம் கோதைசோன். இச்செய்யுள் மயக்கவனி.

3. சோழநா.ே 6. போர் - கதிர்ப்போர்; (குவியல்) நாவல் - கடாவிடுவோர்

சொல்லும் சொல். (ஒ - அளபெடை) ஒதை - ஒசை வடசொல் விகாாம். கிள்ளி - சோழன்.

4. கோசலநாடு,

7. தண்டலை - சோலை; குவளை - நீலோற்பலப்பூ திாை(தடாகத்தின்) அல. எழினி - கிரைச்சில. தேம்பிழி - தேன் போல் இசையை வெளிப்படுத்துகின்ற, மகாயாழ் - யாழ்விசே டம். மருதம் - மருதநிலமாகிய அரசன். மாது, ஓ - அசைகள்.

8. சேல்உண்ட கெண்டை மீனை வென்ற, மால் - பெரு மை. நளினப்பள்ளி - தாமாைச்சயனம். மழலைப்பிள்ளை -அன்னக் குஞ்சுகள். மேதி எருமை உள்ளி - கினைந்து. அன்னக் குஞ்சுகள் பாலுண்டு துயிலத் தவளைகள் தாலாட்டுகின்றன. பண்ணை - மருத நிலம்.

5. ஏமாங்கதகா.ே

9. தெங்கின் பழம் - தேங்காய். வீழ வீழ்தலால்; காாண காரியப் பொருளில் வந்த வினையெச்சம். நெற்றி - உச்சி. தொடைபாளை. வருக்கை - பலாப்பழம்; ஆகுபெயர். போழ்ந்து - பிளந்து. இசையால் - கீர்த்தியால். திசைபோயது - திசையிலுள்ளவர்களெல் லாம் அறியப்படுவது. பழம் விழுதலாலே கீறிப்போழ்ந்து சிதறிச் சிந்தும் ஏமாங்கதமென்று பெயர் கூறப்பட்டு இசையாலே திசை போயதோர் நாடுஉண்டு என்க. கீறி முதலிய எச்சங்கள் தன்வினை. வீழ, அப்பழம் எனக்கூறி இவ்வெச்சங்களைப் பிறவினைப் ருளாக்குவதும் பொருந்தும்.