பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 3.53

னவன் - பாண்டியன். நான்மாடக்கூடல் நகர் - நான்கு மாடங் கள் கூடிய மதுரை நகர். (நான்கு மாடங்கள் கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்னும் கோயில்கள்) இப்பாடலின் சொல்லும் பொருளும், "உலகு மழிசையு முள்ளுணர்ந்து தம்மிற், புலவர் புகழ்க் கோலாற்றுக்க, - உலகுதனே, வைத்தெடுத்த பக்கத்து மாநீர் மழிசையே, வைத்தெடுத்த பக்கம் வலிது, என்று திருச்சநீத விருத்தத்தில் வந்துள்ளமை காண்க: (திருவால நகர. க.) (கிரு விளை தலவி-20) (காஞ்சி திருகக-க) என்பவற்றையும் நோக்குக. 15. மாயோன் - கிருமால். கொப்பூழ்......பூவோடு - உந்தியங் கமலத்தோடு. சீர் ஊர் புாையும் - சிறந்த ஊர் (மதுாை) ஒக்கும். பூவின் அத்தாமரைப்பூவின். இதழகத்து - இதழ்களை, அனைய - ஒத்த தெருவம் தெருக்கள்: இதழகத்து - இதழ் நடுவிலுள்ள. அரும்பொகுட்டு அனைய - சிறந்த கொட்டையை ஒத்த, அண் ணல்கோயில் - அரசன் அரண்மனை: தாதின் அனேயர் - (பூவின்) மகாந்தப் பொடிகளை ஒத்தனர்; தண்தமிழ்க்குடிகள் - இனிய தமிழ்க்குடிமக்கள். தாது உண்பறவை அனையர் - அம்மகரந்தங் களே உண்னும் வண்டுகளை ஒத்தனர்; பரிசில்மாக்கள் - பரிசிற் பொருள்களால் வாழும் மக்கள்: (பாணர் புலவர் முதலியோர்) பூவி னுள் பிறந்தோன் - பிரமன், (அவன் நிர்விற்பிறந்த நான்குவேதத் தை என்க) ஈவில் குரல் எடுப்ப - ஒதுகின்ற ஒசை மிக்கொலிக்க. எம இன்துயில் (சரீரத்திற்குப்) பாதுகாவலாகிய கித்திரையினின் அம். (எழுதல் அல்லதை என்க: 3 சாரியை) வாழிய - அசை. வஞ்சி (சோனது) கருவூர்நகரம். கோழி - (சோழனது) உறை யூர். கோழியின் - கோழிக்குரலால் (கித்திசை) எழாதென்க. (உம் மைகள் எண்ணுப்பொருள்) பேரூர் நவல்குரலெடுப்பத் துயிலெழு தலல்லது துயில் கோழியின் எழாதென்றுகூட்டுக. பேரூர் - மக்க ளுக்கு இடவாகுபெயர். இதனால் இந்நகரத்து வேத வழக்கு மிகுதி கூறினர். இச்செய்யுளில் இரண்டாம் அடியில் மதுரை நகரத்தை விஷ்ணுவின் உந்திக்கமலத்தோடு ஒப்பிட்டு மூன்றாம் அடிமுதல் ஆரும் அடிவரை அவ்வொப்புமையை விரித்துண்ர்த்தி யிருத்தலே நோக்க. வண்டு பறவைச்சாதியாகலின் பறவை, என் முர். அறுகாற் சிறுபறவை என்றார் பிறரும்.