பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 155

5. மதுரைக்கலம்பகம். 6. கடற்ற - யமன்; (ஈண்டுக் கொலைத்தொழில்) அடல் ஆழிக்குரிசில்-வலிய சக்கராயுதமுடைய கிருமால். பில்கி- கசிந்து. கில்ல வனம் - சிதம்பரம். அசம்பிருக்கும் பசும்பொன் - கிள்ளி எடுக்கும் தன்மையுள்ள பொன். மன்றம் - அம்பலம். பகிர்அண் டம் - புறஅண்டம். கருங்கொண்டல் - உமாதேவி. கறைக்கண் டன் - நீலகண்டன்.

6. மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழ்.

7. கருஆலம் - பொக்கிஷம். உயிர் ஆலவாலம் - உயிரா கிய பாத்தி. உணர்வு நீர் - நல் ஞானமாகிய தண்ணிர். எழு தாச்சொல் மழலை - வேதமாகிய மழலைமொழி. தோன்முத் துணைசோமசுந்தாக் கடவுள். முக்கட்சுடர் - திரி கேத்திாம்.

8. நறை - தேன். துறை - பொருள்களே நுகர்தற்குச் செல்லும் வழி. அகந்தை - அஞ்ஞானம். அகழ்ந்து - தோண்டி, தொழும்பர் - அடியார்கள். இமயப்பொருப்பு - இமய மலை. பிடி - பெண்யானை. தாங்கம் - அலை (கடல்) உடுக்கும் - (ஆடையாக) உடுக்கும். ஒருவன்-சிவபெருமான், உயிர் ஒவியம் - உயிர்போல் அரிய சித்திரம். மதுகாம்-வண்டுகள், (தேனேச்சேக ரிப்பது) வாய்மடுக்கும்-உண்னும் மலயத்துவசன்-ஒர் பாண்டி யன்; மலயமலையைக் கொடியில் எழுதியவன்; இவனுக்கு மகளாய் உமாதேவி தடாதகைப் பிராட்டியென அவதரித்தாள்.

1. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்.

9. (1) பெரும்புலவர் - தேவர்கள்; சங்கப்புலவர்கள் கலே அமுது - சந்திாகலையாகிய அமுது, சாஸ்திரங்களின் சுவையாகிய அமுது. கொளவிருந்தோகை (கொளவிருந்து ஒகை) கொள்ளவி ருக்கிடுதலாகிய உவகை;(கொள இரும் தொகை) கொள்ளப்பெரிய மயில். தோற்றி உகந்தாய்-உதித்து முன்பெருகி மலைபோல அல மோதுகின்ற அந்த அக்கினியையுடைய கடலேயும் உகந்தாய் (மற். முெரு பொருள்) வெளிப்பட்டுச் சீறிக் கிரெளஞ்சகிரியைப்போலக் கடலையும் தாக்கிய ஒளிபொருந்திய வேலாயுதத்தை உகந்தாய்;. (விரும்பினய்)