பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிப் பகுதி. 29.

துப்பாட்டு, சிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூலுரைகளில் மேற் கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இதல்ை இந்நூற் பெருமை விளங்கும் இந்நூலுட் கூறப்படும் ஆசாரங்களுட் சில உடலுக் குறுதி பயப்பன, சில உயிர்க்குறுதி பயப்பன. இந்நூலுள் நேரிசை வெண்பா, இன்னிசைவெண்பா, பஃருெடை வெண்பா, சிந்தியல் வெண்பா என்ற வெண்பா விகற்பங்கள் பயின்றிருக்கின்றன இந்நூலாசிரியர் காலம் கடைச்சங்க காலம் -

ஆசாரமூலம். நன்றியறிதல், பொறையுடைமை, இன்சொலோ டின்னுத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை, கல்வியோ டொப்புர வாற்ற அறிதல், அறிவுடைமை, நல்லினத் தாரோடு கட்டல்; இவையெட்டும் சொல்லிய ஆசாா வித்து. 1.

நாட்காலைக்கடன்.

வைகறை யாமம் துயிலெழுந்து, தான்்செய்யும் நல்லறமும ஒணபொருளும் சந்தித்து, வாய்வதின், தந்தையுங் தாயுங் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்ட முறை. 2.

நீராடும்முறை. உடுத்தல்லால் சோடார்; ஒன்றுடுத் துண்ணுர்; உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார், ஒன்றுடுத் தென்றும் அவைபுகார் என்பதே முகதையோர் கண்ட முறை. 3.

சயனமுறை. கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வங் தொழுது, வடக்கொடு கோணம் தலைவையார், மீக்கோள் உடற்கொடுத்துச் சேர்தல் வழி. 4.