பக்கம்:அறுந்த தந்தி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னத்தின் வேற்றி 93

அன்பான பேச்சிலே, நடுவில் சிறிது கடுமை தேவி யின் குரலில் தொனித்தது, கற்கண்டுப் பாகிலே கடுக் கென்று சிறிய கற்கண்டுத் துண்டு கட்டுப்பட்டதுபோலே. அன்னம் விழித்துக்கொண்டது. நேரடியாகச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தது.

囊 来源 蜂

இன் று காலையில் பிரம்மதேவர் பூதி கைலாசத்துக்குப் புறப்பட்டார். ளோமவாரத்தில் ஸர்வலோக நாயகாாகிய சிவபெருமானுடைய தரிசனம் இல்லாவிட்டால் அவருக்கு ஒன்றும் ஒடாது. என்மேல் ஆரோகணித்துக்கொண்டு து கைலாசத்துக்கு எழுந்தருளினர். வழக்கம் போல என்னேக் கோயிலுக்குப் புறம்பே நிறுத்திவிட்டுப் பரமேசு வர கரிசனத்துக்கு எழுந்தருளினர். ரிஷபதேவர் இருக் கும் மண்டபத்தில் என்னே விட்டுச் சென்ருர், கான் உள்ளே போனேன். அங்கே புகுந்தவுடனே எனக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. நாராயண மூர்த்தியும் அன்று பரமசிவனுடைய தரிசனத்துக்கு வந்திருக்கிருமென்பதை உணர்ந்தேன். ரிஷபதேவர் இருக்கும் இடத்தில் கருட தேவரும் இருக்தார். இருவரும் உல்லாசமாகப் பேசிக் காண்டிருந்தனர். நெடு நாள் காணுமல் சக்தித்தவர்கள் போல மிகவும் சந்தோஷத்தோடு சிரித்துக்கொண்டு சல் லாபம் செய்துகொண் டிருந்தார்கள்.

- ரிஷபதேவர் என்னைக் கண்டவுடன் திடீரென்று பேச்சை கிறுத்திவிட்டுக் கண்ணேக் காட்டினர். அந்தக் குறிப்பினுல் நான் வருவதைத் தெரிந்துகொண்ட கருட தேவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். பார்த்தவர் ஒன்றும் பேசவில்லை. வா என்றும் சொல்லவில்லை.

நான் எப்போதும் போல, என்ன, திடீரென்று

பேச்சை நிறுத்திவிட்டீர்களே! நான் வந்தது தடையாக இருக்கிறேதா?’ என்று வேடிக்கையாகக் கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/100&oldid=535339" இலிருந்து மீள்விக்கப்பட்டது