பக்கம்:அறுந்த தந்தி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அறுந்த தந்தி

ரிஷபதேவர் என்னே ஏறெடுத்துப் பார்த்தார். ஏளன மாகச் சிரித்தார்; ஒகோ! உனக்காகப் பயந்துகொண்டு நாங்கள் மெளனம் சாதிப்போம் என்று நினைத்துவிட் டாயோ?' என்று அதுகாறும் கேட்காத ஏதோ தொனி யிலே சொன்ஞர். என் காதை அது அராவியது.

பேசிக்கொண்டே இருந்தவர்கள், திடீரென்று கிறு த்திவிட்டீர்களே என்று கேட்டேன்’ என்று நான் சிரித்த்படியே சொன்னேன்.

பேசுவதும் பேசாமல் இருப்பதும் எங்கள் இஷ் டம். தலை போயும் மானம் டோகாமல் உயிர் வாழ்வோரு டைய சேவகன் கட்டளை இடவேண்டிய அவசியம் இல்லை’ என்று பிரம்பால் அடித்ததுபோலப் பேச்சு வந்தது ; பார்த்தேன். கருடதேவரே அத்தனே ஆக்கிாோஷத்துடன் பேசினர்; பறவை இனத் தலைவராக விளங்கும் சாக்ஷாத் கருடஸ்வாமியே இப்படி ஆத்திரத்துடன் பேசினர்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எம்பெருமானுகிய சதுர்முகப் பிரம்மாவையும் அவர்கள் இழுத்து வரும்படி Lj班T芯 அவர் அவர்களுக்கு என்ன செய்தாரோ தெரிய வில்லை. என்றைக்கோ கடந்ததாகச் சொல்லும் கதையை அவர்கள் இப்போது எடுத்துப் படிக்கக் காரணமும் விளங்க வில்லை. சிருஷ்டிகர்த்தா ஐந்து முகங்களை முதலில் பெற் றுப் பிறகு பரமேசுவரனுக்குத் தம் சிரசையே சமர்ப்ப ணம் செய்து வன்மை பெற்றதை அந்த இரண்டு பெரிய வர்களும் அப்போது நினைக்க வேண்டிய அவசியம் என்னவோ, தெரியவில்லை.

நான் கிதானித்துக்கொண்டேன். பெரியவர்கள் பேச்சை இங்கே இழுக்கவேண்டாம்; அடியேனேப்பற்றி எது வேண்டுமானுலும் சொல்லுங்கள். எம்பெருமானப் பற்றிச் சொல்லாதீர்கள். என்மேல் உண்டான கோபத் துக்கு அவர் காரணமாக மாட்டார்’ என்றேன்.

இப்படிப் பேசிக்கொண் டிருக்கபோதே, "பூவுல கத்தில் குலாலன் சட்டிபானே பண்ணுகிருன். தேவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/101&oldid=535340" இலிருந்து மீள்விக்கப்பட்டது