பக்கம்:அறுந்த தந்தி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னத்தின் வெற்றி 101

வியோ அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றது அன்னம். -

"ஐயோ! பாவம்' என்று லக்ஷ்மியின் தோழி ஒருத் தியின் குரல் காற்ருேடு இழைந்து வந்தது. அரம்பையர் யாவரும் அக்க அதுதாபத்திலே கலந்துகொண்டார்கள்.

நாரதர் மறுபடியும் கனத்துக்கொண்டு பேசலானுர் : 'ஒரு முக்கியமான சங்கதியைச் சொல்ல மறந்துவிட் டேன். உங்களுடைய எஜமானர்களின் கருணையால் நீங்கள் பெற்ற பலத்தைக் கொண்டு இங்கே பரீட்சை செய்யக் கூடாது. அது தவறு. உங்களுக்கு ஸ்வபாவமாக உள்ள ஆற் றலை, உங்கள் ஜாதியினர்களுக்கு எவ்வகையான சக்தி உண்டோ அந்த இயல்பான சக்தியை வைத்துக்கொண்டே நீங்கள் ஜயிக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பங்க யம் கிரிமூர்த்திகளின் பலாபலத்தைச் சோதித்ததாக முடி யும். அது மிகவும் அபசாாம். ஆகையால் உங்கள் மூவ ரிடத்திலும் உள்ள தெய்வ சக்தியை இதோ கிரகித்துக் கொள்கிறேன். உங்கள் சொத்த பலத்தைக்கொண்டே ஜவிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு மங்க

ளம் உண்டாகட்டும்! இனி ஆரம்பிக்கலாம்.'

மக் கிராகதையைத் தூவி ஆக்ஞை கொடுத்தார் நாா தர். தேவர்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தொடங் கினர்கள். ரிஷபதேவர் துள்ளிக் குதித்தார். கருட பக வான் கத்திக் காவிப் பறந்து குது கலித்தார். அன்னம் மெல்ல கடந்தது. கூAண நேரத்தில் ரிஷபதேவர் சத்திய லோகத்தின் எல்லையை அடைந்துவிட்டார். கூரிய கண் படைத்த தேவர்கள் இருந்த இடத்திலிருந்தே பார்த்துக்

கொண்டிருந்தார்கள்.

3 - கருடதேவர் ரிஷபதேவரை அடுத்துச் சென்ருர்.

அன்னம் இருவருக்கும் சற்றுத் தாத்திலே நடந்தது. ரிஷபதேவர் வாலேக் கிளப்பிக்கொண்டு மேகத்தை முட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/108&oldid=535347" இலிருந்து மீள்விக்கப்பட்டது