பக்கம்:அறுந்த தந்தி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னத்தின் வெற்றி 103

அலேகள் கன்னத்தில் அடித்தன; காதில் அடித்தன. அப் போது எந்த ஞாபகமும் அவருக்கு வரவில்லை. இதுகாறும் அதுபவிக்காக பிராண் சங்கடம் ஒன்றை அநுபவித்தார். நாகம் என்பதை அவர் பார்த்ததில்லை. அதுதான் சாகமோ என்றுகூட எண்ணினர்.

வாய்விட்டுக் கதறி அறியாத ரிஷபதேவர் அன்று, முதல் முறையாக, 'அம்மா!' என்று அலறினர். அவ்வளவு தான் தெரியும்; அவர் கினேவிழந்தார்.

கருடதேவர் சத்தியலோகத்தின் எல்லைக்கு வந்த போது ரிஷபதேவரைக் காணவில்லை. அவர் முன்னுலே நெடுந்துராம் போய்விட்டாரென்ற எண்ணிக்கொண்டார். பாற்கடல் கொந்தளித்துக்கொண் டிருந்தது. கருடபகவா லுக்கு rராப்தியைக் கண்டவுடன் பின்னும் உற்சாகம் உண்டாகிவிட்டது. கரையோரமாகச் சென்று சிறிது நின் முர். சிறகைக் கோதிக்கொண்டார். ஒரே வேகமாகப் பறந்து போனுல் ரிஷப தேவரைப் பிடித்துவிடலாம் என்று எண்ணி எழும்பிப் பறந்தார். பாற்கடல் என்றும் இல்லாமல் பல மடங்கு நீண்டுவிட்டதோ என்று தோன்றி யது அவருக்கு. பறக்கப் பறக்கத் துனாம் மாளவே இல்லை. பறப்பதென்ருல் கருடஸ்வாமிக்கு அளவற்ற உற்சாகம். அதுவும் rாாப்திக்கு மேலே பறப்பது அவருக்கு கித்திய விளையாட்டு. இன்ருே, இதென்ன இப்படி? சிறகுகள் சேரு மிடத்தில் தோள் பட்டையில் கொஞ்சம் வலியெடுக்கிறது போல் இருக்கிறதே! இந்தப் புதிய அநுபவம் முதலில் அவருக்கு விசித்திரமாக இருந்தது ; மயக்கமோ என்று தோன்றியது ; பிறகு வாஸ்தவமாகப்பட்டது. சிறிது கோம் சிறகை அசைக்காமல் வானவெளியில் துணங்குவதுபோல மிதந்தார். சிறிது களைப்புத் தீர்ந்தது. மேலே பறக்க வேண் டுமே! பாற்கடலைக் கடந்து செல்லவேண்டுமே! தம் கூரிய திருஷ்டியால் பின்னே பார்த்தார். அது வரையில் கண்னுக்கே தெரியாமல் இருந்த அன்னம் சிறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/110&oldid=535349" இலிருந்து மீள்விக்கப்பட்டது