பக்கம்:அறுந்த தந்தி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அறுந்த தந்தி

ஈயைப்போல நெடுக் தாரத்தில் பறந்துவருவது தெரிந்தது. முன்னுல், ரிஷபதேவர் எவ்வளவு துரம் போனரோ என்ற எண்ணத்தோடு பறக்தார். இப்போதோ, இவன் வந்து விட்டானே' என்ற ரோசம் உந்தியது. பலங் கொண்ட மட்டும் சிறகுகளை மடக்கி விரித்து வானக்கடலில் ஒரு தாவுத் தாவினர்.

மனுேவேகம் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு வேகத்தில் நெடுந்துாரம் போய்விட்டார். ஆனல் சிறகுகளின் மூட்டுவாய்களிலே இப்போது இசிவு கண்டது. சிறிது ஆறுதலாக மிதந்தார். சிறகை விரித்த படியே மிதப்பதில் எப்போதுமே அவருக்குச் சிரமம் இல்லை. பூமியின்மேல் படுத்திருந்தால் நமக்குச் சிரமமோ முயற் சியோ இருக்குமா? அதுபோலத்தான் இருக்கும் முன்பு. ஆனல் என்ன ஆச்சரியம்! அப்போது அப்படி மிதப் பதற்குக்கூட முயற்சி வேண்டி யிருந்தது. சக்தி யில்லாமல் தத்தளிக்கும் கிலே ஒன்று உண்டு' என்பதைக் கனவிலும் கினேத்துப் பார்த்ததில்லே அவர். இப்போதோ, சக்தி நம்மிடமிருந்து குறைகிறது’ என்பதை அணு அனுவாகத் தெரிந்துகொள்ளும் சக்தர்ப்பம் வந்துவிட் டது. என்ன இது! பறக்கிருேம் என்ற கினவே இல்லாமல் வானவெளியில் வட்டமிட்ட நாம் இன்று திடீரென்ற முடமாகிவிட்டோமா?’ என்று கிரீனத்தபோது, சுரீ ரென்று தோள்பட்டையில் வலியெடுத்தது.

'ஜல் ஜல்!' என்ற ஒலி அவர் காதில் விழுந்தது. அன்னம் வந்துகொண் டிருப்பது தெரிந்தது. மானம் தாங்க முடியவில்லை புள்ளாசுக்கு. மற்ருெரு முறை மூச் சைப் பிடித்துக்கொண்டு வானக்கடலிலே தாவி ஞர். இதோ அக்கரை அவர் கண்ணுக்குப் புலப்பட்டது. இனிமேல் உயிரைப் பிடித்துக்கொண்டாவது பறக்கலா மென்ற துணிவு வந்தது. ஆனல் சிறகு வேலை செய்ய வில்லை. உடம்பெல்லாம் ஒரே இசிவு. சிறகை யாராவது கழற்றிவைத்தால் தேவலே என்று தோற்றியது. பின்னல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/111&oldid=535350" இலிருந்து மீள்விக்கப்பட்டது