பக்கம்:அறுந்த தந்தி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னத்தின் வெற்றி 105

திரும்பிப் பார்த்தபோது அன்னத்தைக் காணவில்லை. சிறிது ஆறுதல் உண்டாயிற்று. அடுத்த கணத் தில் மீண்டும் அன்னத்தின் சப்தம், சிலம்பு போன்ற ஒலி, காதில் விழுந்தது. இப்போது கீழேயிருந்து அங்கத் தொனி கேட்டது. சரி, தொலைந்தான். நாம் பட்ட பாட்டுக்கு இவன் எந்த బ్రpడి) ? இந்தப் பாற்கட லுக்கு இரையாகிவிட்டான்' என்று எண்ணிய எண்ணத் திலே ஒரு துளி போலியான இன்பம் அவருக்குக் கிடைத் தது. ஆனல் உடனே இரண்டு விலாவிலும் சுரீரென்று வேதனே எழுந்தது. கடலைக் கடக்க வேண்டுமே! பக்தியம் ஜயித்தாலும் ஜயிக்காவிட்டாலும் கடலைக் கடந்து தாையில் போய்த்தானே கிற்கவேண்டும்? நடுக்கடலில் இளைப்பாற முடியுமா? பிராணனக் காப்பாற்றிக்கொள் வதற்காகப் பறக்கவேண்டியது அவசியமாகிவிட்டது.

புதிய மலைப்பு ஏற்பட்டது.சோர்வினுல் உடம்பு கொஞ் சம் கீழே இறங்கியது. என்ன ஆச்சரியம்! அன்னத்தின் குரல் அவர் காதில் இப்போதும் விழுந்தது. தம் கிருஷ் டியைக் கீழே செலுத்தினர். வெண்ணிறப் பாற்கடற் பாப் பிலே சுலபமாக அன்னத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பொன்னிறம் பெற்ற அதன் கொண்டை பளபளத்தது. அது கண்ணிலே பட்ட பிறகுதான் கருடதேவருக்கு அக்தச் சின்னஞ் சிறு பறவையின் இருப்பிடம் தெரிந்தது, அது ஏதோ வாயில்ை சொல்லிக்கொண்டே இருக்கிறதே! 'அம்மா, கருளுகரீ' என்ற சப்தம், குழறுவதுபோலக் கருடன் காதில் விழுந்தது. கூர்ந்து கவனித்தார். ஆச்சரி பத்தின்மேல் ஆச்சரியம்! அன்னம் ஒய்யாமாகப் பாற் கடல் திரைய்ைத் தெப்பமாகவும் அம்பிகையின் திருநாமத் தைக் கோலாகவும் கொண்டு சுகமாக மிதந்து நீந்தி வரு கிறது! அன்னம் அல்லவா அது? நீர்நிலைக்கு அஞ்சுமா?

கருடபகவானுக்கு நெஞ்சிலே இடி விழுக்தது போல் ஆயிற்று. எந்த வான்வெளியைத் தம்முடைய எகடோக ராஜ்யமாக எண்ணி அரசுசெலுத்தி வந்தாரோ அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/112&oldid=535351" இலிருந்து மீள்விக்கப்பட்டது