பக்கம்:அறுந்த தந்தி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னத்தின் வெற்றி 107

குத்தான் மதிப்பு உண்டு என்பதை இன்று உலகமெல்லாம் அறிந்துகொள்ளும். இனிமேல் நீ எனக்கு வாகனம் ஆவாய். உன் ஜாதியில் மற்ருென்று நான்முகனுக்கு வாகனம் ஆகட்டும். உன்னுடைய பெருமையைத் தேவர்கள் அறியட்டும். பூவுலகத்தினர் அறியட்டும். உன் பெயரால் ஒரு மந்திரம் இதோ வெளியிடுகிறேன். ஜபிக்காத மந்திர மாகிய அதற்கு அஜபா மந்திரம் என்ற பெயர் இருக்கும். உன் பேரால் ஹம்ஸ் மந்திரம் என்றும் வழங்கும். மகா யோகிகளுடைய உள்ள்த் தடத்திலே இந்த மந்திர உருவத் தில் நீந்தி விளையாடுவாயாக!

'இது மட்டுமன்று. பூலோகத்திலும் உன்னுடைய அம்சம் வெல்லட்டும். தரையில் செல்லும் வண்டியும் நீரில் செல்லும் கப்பலும் வானத்தில் செல்லும் விமான மும் இதுவரையில் பூவுலகத்தில் இருந்தன. அவற்றின் மதிப்பு இனி மங்கும். கிலத்திலும் வானத்திலும் நீரிலும் ஒருங்கே இயங்கும் விமானங்களே இனி உலகில் மதிப்பைப் பெறும். உன் அம்சமான அவற்ருல் இனி உலகத்தார் போர் புரிவார்கள் ;பிரயாணம்செய்வர்கள். ஹம்ஸ்மே, வோழ்க!” அன்னம் மெய்ம்மறந்து போயிற்று. சிறிது நோம் கழித்து மெல்லக் கண் திறந்து அம்பிகையின் திருமுகத் தைப் பார்த்தது. 'அம்மா, அவர்கள்...' என்று தயங் கித் தயங்கி ஆரம்பித்தது.

"அந்த ஆணவப் பிண்டங்களா? இங்கே வா’ என்று சொல்லி வெளி மண்டபத்துக்கு அழைத்துச் சென்ருள் தேவி. 'அம்மா என்று அலறி விழுந்ததால் இவற்றை இங்கே கொண்டுவரச் செய்தேன்' என்று சொல்லிக் காட்டினுள், அன்னத்துக்கு. மூர்ச்சை போட்ட நிலையில் உடம்பெல்லாம் பாலும் ரத்தமும் சேர்ந்து கசிய ரிஷபமும் கருடனும் கிடந்தன. -

அன்னம் துணுக்குற்றது. அதன் உள்ளும் நெகிழ்க் தது. 'அம்மா, ஒரு வரம் கேட்கிறேன்' என்று தீன மான குரலோடு சொல்லியது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/114&oldid=535353" இலிருந்து மீள்விக்கப்பட்டது