பக்கம்:அறுந்த தந்தி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அறுந்த தந்தி

சொல்கிருர்களே; அப்படி, இப்போதே அந்தப் பிராம் மணன் அல்வாவும் ஜிலேபியும் தக்து படிப்பு வாசனைக்கே போகாமல் அடித்துவிட்டால்...'

பரமேசுவரையருக்குக் கோபம் மூண்டது. ரொம்பப் படிப்பைக் கண்டுவிட்டதுபோல் பேசுகிருயே. நாலு வய சுக் குழந்தைக்குப் படிப்பு வரவில்லையே என்று அங்க லாய்க்கிருயாக்கும்! நாளைக்கு மூன்று தடவை குழக் தையை அடிக்கிறதில் குறைச்சல் இல்லை ; பத்து மாசம் சுமந்தாளாம், பெற்ருளாம்! படிப்பு வராதாம். நீ குழங் தையை வளர்க்கிற அழகு எனக்குத் தெரியாதாக்கும்' என்று வெடுவெடுவென்று சொல்லியபடி அவர் வெளி லே போய்விட்டார். -

பார்வதி அப்படியே ஒர் இடத்தில் உட்கார்த்துகொண் டாள். அவளுக்குத் துக்கம் துக்கமாக வந்தது. அழுது ஆற்றிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது.எதற்காக அழு வது ? எந்தக் காரணத்தை எடுத்துச் சொல்லி அழுவது?இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டுமே என்று பயந்துதான் அழவில்லைபோலும்!

அப்போது நான்கு வயசுள்ள ஆண் குழந்தை ஒன்று, அம்ம்ா! இதோ பார், மாமா குடுத்தா' என்று மழலை மொழியிலே கொஞ்சிக்கொண்டு கையில் ஒரு ஜிலே பியுடன் அவள் எதிரே வந்து கின்றது. பார்வதி அவசா அவசரமாக எழுந்தாள். சடக்கென்று குழந்தை கையில் இருந்த ஜிலேபியைப் பிடுங்கித் துார எறிந்தாள். நீ நாச மாய்ப் போக!' என்று அந்த இளங்குழந்தையின் முதுகில் பல்லேக் கடித்துக்கொண்டு நாலு அறை வைத்தாள். 'இனி மேல் அந்தப் பக்கம் போ, உன்னைப் பிணம் புரட்டிவிடுகி றேன். மாமா முறையைப் பார், மாமா முறையை ! உங்கள் ம்மாவுடன் கூடப்பிறந்த மாமா முறை தட்டுக்கெட்டுப் போகிறது! வழியிலே போகிற கட்டையிலே போகிறவன் எல்லாம் நமக்குச் சொந்தக்காரளுக வந்துவிடுகிருன். இனி மேல் அங்கே போகாதே! போகவில்லை என்று சொல்’ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/117&oldid=535356" இலிருந்து மீள்விக்கப்பட்டது