பக்கம்:அறுந்த தந்தி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினி சாட்சி III.

என்று மறுபடியும் இரண்டடி வைத்தாள். குழந்தை அடி தாங்காமல் வீரிட்டு அழத் தொடங்கியது.

வாசற்பக்கத்திலிருந்த அறையிலிருந்து ஒரு பெண் மணி தலையை நீட்டி இந்தக் கோலத்தைக் கண்டு பாபா வென்று அங்கே வந்து, 'அம்மாமி, குழந்தையை ஏன் அடிக்கிறீர்கள் ? ஒரு பாவமும் அறியாத அதை எதற்காக அடிக்கவேனும்? உங்கள் கோபத்தை அதன்மேல் காட்டு கிறீர்களே !” என்ருள்.

பார்வதிக்கு முன்பே கோபம். அது இப்போது பிரசண்ட ரூபத்தை எடுத்துக்கொண்டது.

தோன் என் கோபத்தைக் கண்டாயோ! என் குழங் தையை நான் அடிக்கிறதை நீ யாரடி வந்து தடுக்க? அதன் மேல் உனக்கு அவ்வளவு கரிசனம் என்று என்னிடந்தான் காட்டிக்கொள்ள வேனுமோ? உற்ருர் உடன்பிறந்தார். மாதிரி கியாயம் பேச வந்துவிட்டாயே. மண்ணுங்கட்டி தெருப் புழுதியை யெல்லாம் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துக் குழந்தையை வசியம் பண்ணுகிறீர்களோ? நாளைக்கு அதற்கு ஏதாவது நோய்நொடி வந்தால் நீங்கள் தாம் கவலைப்படப் போகிறீர்களோ! ரொம்ப அக்கறை யோடு பேச வந்துவிட்டாள் !'

'அம்மாமி, உங்கள் இஷ்டப்படி யெல்லாம் பேசிக் கொண்டு போங்கள். பதில் சொல்ல நான் ஆளல்ல. உற்ருர் உறவினருக்குத்தான் மனசு இருக்கும், மற்றவர்களுக்கெல் லாம் மனசு கல்லால் ஆனது என்று நீங்கள் எண்ணி யிருக்கலாம். ஆளுல் எங்களுக்கும் ஈவு இாக்கம் உண்டு. குழந்தைக்கு விஷம் கொடுத்துவிடவில்லை. அவர் தனியே ல்ேல நெய்யில் குழந்தைக்காகப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தது அது’ என்று அவள் சொல்லிக்கொண்டு வரும் போது, ஹா! இதென்ன? இவளும் அதையே சொல்கி முள். குழந்தைக்கு விஷம் கொடுத்துவிடவில்லை என்று அவர் சொன்னதையே சொல்கிருளே! இதென்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/118&oldid=535357" இலிருந்து மீள்விக்கப்பட்டது