பக்கம்:அறுந்த தந்தி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அறுந்த தந்தி

இரண்டு பேரும் பேசி வைத்துக்கொண்டார்களோ! என்று பார்வதியின் சிந்தனே சுழன்றது.

குழந்தை அழுதுகொண்டே அந்தப் பெண்மணி யிடம் போக எண்ணித் திரும்பியது. பார்வதி வெடுக் கென்று அதன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு மறு படியும் இாண்டு அடி கொடுத்துவிட்டு, 'இதோ பார், இந் தக் குழந்தையின் வழிக்கு நீங்கள் வந்தால் விணுக அவ மானப்பட்டுப் போவீர்கள். என் குழந்தைக்கு நல்லவர்கள் சகவாசம் வேனுமேயொழிய ஹோட்டல்காரர் சகவாசம்

வேண்டாம்' என்று படபடவென்று கொட்டிவிட்டாள்.

'அவர்களும் மனிதர்கள் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் அம்மாமி. மட்டு, மரியாதை, மானம், அவ மானம் எல்லாம் அவர்களுக்கும் உண்டு. கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிடலாம். வார்த்தை கிற்கும். மறந்து போகாது' என்று சொல்லிவிட்டு வேகமாக அவள் தன் அறைக்குப் போய்விட்டாள்.

2

ஒரே வீட்டில் குடித்தனம் செய்யும் நடுத்தர அந்தஸ்துள்ள குடும்பம் ஒன்று, ஏழைக் குடும்பம் ஒன்று, ஆகிய இந்த இரண்டு குடும்பங்களிலும் தலைமை வகிக்கும் ராணிகள் இந்த இாண்டு பேரும். பார் வதியம்மாள் கோபால நாயகர் ஹைஸ்கூலில் வாத்தியார் வேலை பார்க்கும் பரமேசுவரையரின் பத்தினி. ஜானகி கமல விலாஸ் ஹோட்டலில் சாக்குப்போடும் ராமசாமி ஐயரின் பெண்டாட்டி. இரண்டு குடும்பங்களும் எப்படியோ சுப்பு செட்டியாருக்குச் சொந்தமான அக்த வீட்டில் குடித் தனம் இருக்கும்படி நேர்ந்துவிட்டது. மேல்மாடியில் இரண்டறைகளும் கீழே ஒரு சமையலறையும் பார்வதியம் மாளின் ஆட்சிக்கு உட்பட்டவை. விட்டின் முன் பாகத் திலுள்ள இரண்டு சிறிய அறைகளைப் பெருக்கி மெழுகிக் கோலம் போட்டு அங்கே சமைத்துச் சாப்பிட்டுத் தன் புருஷனுடன் வாழ்பவள் ஜானகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/119&oldid=535358" இலிருந்து மீள்விக்கப்பட்டது