பக்கம்:அறுந்த தந்தி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卫卫8 - அறுந்த தந்தி

ராமசாமி ஐயருக்கு ஒன்றும் தோன்றவில்லை; 'அசடே, அழாதே. ஆயிரம் இருந்தாலும் குழந்தை அவர்களுடையது. சொத்துக்கு உடையவர்களைக் கட்டுப் படுத்த நாம் யார்?...ஒன்று தோன்றுகிறது. நமக்காக அவர் கள் சிரமப்பட்டு விடு தேடுவானேன்? நாமே வேறு விடு பார்த்துக்கொண்டால் போகிறது. சரி, அப்படிச் செய்வது தான் நல்லது” என்ற சொல்லித் தம் கருத்தைப் பரமேசுவ ாையரிடம் தெரிவித்தார். அவருக்கு ராமசாமி ஐயரிடம் இருந்த மதிப்பு இன்னும் அதிகமாயிற்று. எத்தனை எல்ல வர் ! நம்முடைய கஷ்டத்தைப் போக்கத் தாம் வேறு விட் டுக்குப் போகிறேன் என்கிருரே! இவர் இந்த யுகத்தில் பிறந் திருக்கக்கூடாது. இந்த உலகம் மிகவும் கெட்டது. தொழி லில் என்ன இருக்கிறது? அந்தஸ்தில் என்ன இருக்கிறது? எல்லாம் போலி வேஷம்’ என்று அவர் சிந்தனே படர்ந்தது.

'ராமசாமி ஐயரே, நான் ஏதோ முகஸ்துதிக்காகச் சொல்கிறேனென்று நினைக்கவேண்டாம். நீர் ஆயிரத்தில் ஒரு மனுஷர். உம்முடன் இருக்க நான் கொடுத்துவைக்க வில்லை. அவ்வளவுதான். நீர் எனக்குச் செய்த உபகராம் அதிகம். உமக்கு என் குடும்பத்தால் அசெளகரியம் உண்டாவதைப் பாராட்டாமல், நீரே வேறு வீடு பார்த்துக் கொள்கிறேன் என்கிறீர். இதுவும் உம்முடைய பெருந்தன் மையையும் உபகாரசிங்தையையும் காட்டுகிறது. உமக்கு நான் என்ன செய்யப் போகிறேன்! நீர் என்னேப் பெரிய கடனளியாக்கிவிட்டீர்!’’’ என்று கண்களில் நீர் துளிக்கப் பரமேசுவரையர் சொன்னபோது, அவர் உள்ளம் எவ் வளவு துராம் வேதனைப்பட்டதென்பது வெளியாயிற்று.

"நான் பிரமாதமாக ஒன்றும் செய்துவிடவில்லை. நீங்கள்தாம் எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்யவேண் ம்ெ. உங்கள் காலைப் பிடித்துக்கொள்கிறேன்.ாாங்கள் வேறு விட்டுக்குப் போனலும் குழந்தை ஜயராமனே அடிக்கடி சாங்கள் பார்ப்பதற்கு அநுமதி கொடுங்கள். அவனைப் பார்க்காவிட்டால் எனக்கு ஒன்றுமே தோன்ருது. ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/125&oldid=535364" இலிருந்து மீள்விக்கப்பட்டது