பக்கம்:அறுந்த தந்தி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினி சாட்சி 119

பூர்வ ஜன்மத்தில் இருந்த பார்தவ்யமோ என்னவோ, என் ம்னசு அவனிடம் பதிந்துவிட்டது. நாங்கள் ஏழைகளே! இந்த மாதிரி அழகான குழந்தையிடம் அன்பு காட்டுவதற்குக்கூட யோக்கியதை இல்லாதவர்களே! ஆன அலும் தெய்வாதீனமாகப் பழகிவிட்டோம். இப்போது மனசு அலைபாய்ந்து தவிக்கிறது. நான் என்னவோ உளறு. கிறேனென்று கிக்னத்துக்கொள்ளாதீர்கள். நான் மகாபாவி! எனக்குக் குழந்தை இல்லாததற்கு நான் வருந்தவில்லை. அயலார் குழந்தையிடம் பழகக்கூடப் பாக்கியம் இல்லையே என்றுதான் அங்கலாய்க்கிறேன். ஏதோ பாவம் செய்து இந்தக் கொழிலுக்கு வந்திருக்கிறேன். ஆனலும் அதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. குழந்தையை கினேக்கும் பாதுதான்...பாவி!...மகா பாவி!. . . அவர் வாக்குத் இடைப்பட்டது; உணர்ச்சி பொங்கியது.

'ராமசாமி ஐயர், நீர் கவலைப்படாதேயும். நீர் வருத் தப்படுவதைப் பார்த்தால் எனக்குச் சகிக்கவில்லை. குழங் தையை அடிக்கடி உங்களிடம் நானே அழைத்து வரு கிறேன். உங்களுக்காக இல்லாவிட்டாலும் குழந்தையின் கூேமத்துக்காகவாவது அப்படிச் செய்யவேண்டுவது அவ சியம். இல்லாவிட்டால் அவன் ஏங்கிப் போய்விடுவான். பேருக்குத்தானே அவன் எங்கள் குழந்தை? கர்மநியாயப் படி அவன் உங்கள் குழங்தைதான். நான் இதை உணராத வன் அல்ல. ஆனலும் என்ன செய்வது? உலகத்தில் கட வுள் எல்லோரையும் ஒரே மாதிரி படைக்கிருரா? மனிதர் களுக்குள் தேவர்களும் இருக்கிருர்கள் ; பேய்களும் இருக் கின்றன. .

※ 米 来 ராமசாமி ஐயர் வேறு வீட்டுக்குக் குடிபோனர். அவர் இருந்த இடத்துக்கு வேருெருவரை அவரே ஏற்பாடு செய்து வைத்துவிட்டுத்தான் போளுர். .

பரமேசுவாையர் சொன்னபடி குழந்தை ஜயராமன் அவர்களோடு போவேனென்று அழுதான்; பிடிவாதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/126&oldid=535365" இலிருந்து மீள்விக்கப்பட்டது