பக்கம்:அறுந்த தந்தி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அறந்த தந்தி பிடித்தான்; பார்வதியினிடம் அடி வாங்கிக்கொண்டான். "குழந்தைக்குச் சூன்யம் வைத்துவிட்டார்களோ!' என்ற வழியனுப்பு உப்சாரத்தோடு ராமசாமி ஐயர் அந்த விட்டை விட்டுப் போளுர்.

பரமேசுவரையர் மாலை நேரத்தில் குழந்தையையும் அழைத்துக்கொண்டு உலாவப் போவார். போகும்போது குழந்தையை ராமசாமி ஐயர் வீட்டில் விட்டுவிட்டுப் போவார்; வரும்போது அழைத்து வருவார். ராமசாமி ஐயர் அந்த நேரத்துக்கு ஹோட்டலிலிருந்து விட்டுக்கு வந்து இருந்துவிட்டுக் குழந்தை போன வுடன் போவார். குழந்தை மாமா'விடம் போய்விட்டு வருகிறதைப் பார்வதி குறிப்பாக அதன் வாய்மூலமாகத் தெரிந்து பர மேசுவரையரிடம் சிறி விழுந்தாள், அவர், ஏதோ ஒருநாள் இாண்டு நாள் போனதாகச் சொல்லிச் சமாதானம் செய் தார். இப்படி ஒரு விதமான நாடகம் கடந்து வந்தது.

-يكه

தீபாவளி விருத்து சாப்பிட்டுவிட்டு அவரவர் விட் டில் கொண்டாட்டமும் குதுனகலமுமாக இருந்தது. பரமே சுவாையர் யாரோ கண்பர்களைப் பார்த்து வருவதாகப் புறப்பட்டார். வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்தக்காரர் வீட்டுக்குத் தீபாவளி விருந்தினராகப் போய்விட்டார்கள். பார்வதி குழந்தையை அருகில் விட்டுக்கொண்டு படுத் திருந்தாள். மணி மூன்று இருக்கும். வெளியிலே அன்று என்றும் இல்லாமல் நல்ல வெயில் அடித்தது. இரண்டு நாட்களாகத் தீபாவளிப் பகAணத்துக்கு வேண்டிய ஏற் பாடுகளை ஒன்றியாகச் செய்த அலுப்பும், விடியற்காலையில் இரண்டு மணிக்கே விழித்துக்கொண்டு தீபாவளி ஸ்கானத் துக்கு ஏற்பாடு செய்த சிரமமும் சேர்ந்து அவளை மிகவும் அயர்ந்த கித்திரையில் ஆழ்த்தின. விட்டிலும் யாரும் இல்லை; சந்தடியில்லாத கூடத்தில் சுகமாகத் துரங்கிக் கொண்டிருந்தாள். l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/127&oldid=535366" இலிருந்து மீள்விக்கப்பட்டது