பக்கம்:அறுந்த தந்தி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினி சாட்சி I21

குழந்தை ஜயராமன் சிறிது நேரம் படுத்துக்கொண் டிருந்தவன், பிறகு விழித்துக்கொண்டான். மேல் மாடியில் ாாத்திரி பட்டாசுகளைச் சுட்ட துண்டுகள் கிடந்தன. அவற்றைப் பொறுக்குவதற்காக அவன் மேலே போய்த் தன் காரியத்தைப் பார்த்துக்கொண் டிருந்தான்.

திடீரென்று பக்கத்து விட்டில் குழந்தைகள் புஸ் வாணம் கொளுத்தினதால் தி விபத்து ஏற்பட்டு வீடு பற் றிக்கொண்டது. அது வேகமாக இந்த வீட்டுக்கும் பரவி யது. அதற்குள் தெருவில் கூட்டம் கூடிவிட்டது. ஜனங் கள் ஆரவாரம் செய்தனர். பரமேசுவர ஐயரின் விட்டுக் கதவை இடித்தார்கள். பார்வதி திடுக்கிட்டு எழுந்து கக வைத் திறந்து வெளியே வந்தாள். தன் விட்டு மேல்மாடி யில் தீப்பற்றிக் கொண்டதைக் கண்டாள். "ஐயோ, குழந்தை' என்று அலறிக்கொண்டு உள்ளே ஒடினவள் நிலை தடுக்கிக் கீழே விழுக்தாள் ; மூர்ச்சை போட்டுவிட்டது.

வாசலில் ஒரே கூட்டம். வீடு முழுவதும் புகை சூழ்ந்தது. விழுந்த பார்வதியைச் சிலர் வெளியில் தூக்கி வந்து ஆசுவாசப்படுத்தினர்கள். அவள், "ஐயோ குழந்தை!” என்றது, ஆரவாரத்தில் யார் காதிலும் விழவில்லை.

நெருப்பை அணைக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்துகொண் டிருந்தன. அக்கினிபகவான் நடுப் பகலில் தீபாவளி வேடிக்கை காட்டிக்கொண் டிருந்தான். தீ விபத் அச் செய்தி ஊர் முழுவதும் பரவிவிட்டது. ஒரே கூச் リー6U LDHLI.D。

'வழி விடுங்கள், வழி விடுங்கள் ! குழந்தை எங்கே? குழந்தை எங்கே?' என்ற சப்தந்தான் கேட்டதே ஒழிய அப்படிச் சொன்னவர் யாரென்று தெரியவில்லை. ஒர் உரு வம் புகை மூண்ட அந்த விட்டுக்குள் புகுந்தது. 'ஜய ராமா!' என்ற அலறல், 'அம்மா!' என்ற குழந்தைச் குரல் இரண்டும் அடுத்தடுத்துக் கேட்டன. சில நிமிஷங் களில் உள்ளேயிருந்து கையில் குழந்தையை ஏந்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/128&oldid=535367" இலிருந்து மீள்விக்கப்பட்டது