பக்கம்:அறுந்த தந்தி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அறந்த தந்தி

கொண்டு அவ்வுருவம் ஓடிவந்தது. மேல் வேஷ்டியால் குழந்தைய்ை இறுக மூடியிருந்ததால் செருப்பு அதைத் தீண்டவில்லை; ஆனல் அந்த மனிதரை ருசி பார்த்துவிட்டது. அவர் தலே மயிர் பொசுங்கியது. உடம்பில் நெருப்புக் காயம். அப்பா' என்று சொல் லிக் குழந்தையை வெளியில் விட்டு அவர் கீழே சாய்ந் தார். ஜனங்களின் ஆரவாரம் பலமாயிற்று. ஆம்புலன்ஸ் கார் வந்தது. மயக்கம் போட்டிருந்த குழந்தையையும் நெருப்புக் காயம் பட்டுச் சோர்ந்து வீழ்ந்த மனிதரையும் எடுத்து ஆஸ்பத்திரிக்குச் சென்றது.

பார்வதி மூர்ச்சை தெளிந்து எழுந்தாள். 'என் குழந்தை எங்கே?' என்று கேட்டாள். அப்போதுதான் பரமேசுவரையர் அங்கே ஒடிவந்தார். அவரும், 'குழந்தை எங்கே?' என்று பரபரப்புடன் கேட்டார். சுற்றி நின்ற வர்கள், யாரோ ஒருவர் குழந்தையை எடுத்துக்கொண்டு வந்தார். ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிருர்கள்’’ என்ருர் கள். பார்வதியை நண்பர்களின் பாதுகாப்பில் விட்டு விட்டு அவர் ஆஸ்பத்திரிக்கு ஓடினர். விபத்துக்கு உள் ளானவர்கள் சிகிச்சை பெறும் பகுதியை அடைந்தார். விசாரித்துக்கொண்டே உள்ளமும் உயிரும் தத்தளிக்கத் தேடினர். கடைசியில் பார்த்தார். யாாை?

ராமசாமி ஐயர் தீப்பட்ட காயங்களுடன் படுக்கை யில் கிடக்கிருர். அருகில் குழந்தை ஜயராமன் உட் கார்ந்துகொண் டிருக்கிருன். "மாமா, உனக்கு என்ன? உவ்வாவா? என்று அவன் கேட்கிருன் இல்லே கண்ணு' என்று சொல்லி அந்த இளங் குழந்தையின் ஒளி வீசும் கண்களை அவர் பார்த்துக்கொண்டே, தம் கோவையும் மறந்து உள்ளங் குளிர்கிரு.ர்.

இந்தக் காட்சியைத்தான் பரமேசுவாையர் பார்க் தார். அவர் அப்படியே ஸ்தம்பித்துப் போளுர். ராமசாமி ஐயரின் கால்மாட்டில் போய் அவர் காலைத் தொட்டுக் கண் னில் ஒற்றிக்கொண்டு, 'ஐயா, நீர் மனிதர் அல்ல;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/129&oldid=535368" இலிருந்து மீள்விக்கப்பட்டது