பக்கம்:அறுந்த தந்தி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினி சாட்சி 123

தெய்வம்!’ என்று சொல்லிப் பலபலவென்று கண்ணிர் உதிர்த்துவிட்டார்.

"அப்பா, மாமாவுக்கு உவ்வா!” என்று குழந்தை சொல்லித் தன் சின்னஞ் சிறு கையால், உடல் புண்பட்டா அம் உள்ளம் புண்படாத அந்த உபகாரியைச் சுட்டிக் காடடியது.

பரமேசுவரையருக்கு என்ன தோன்றிற்ருே ; 'இதோ வருகிறேன்' என்று சொல்லி மறுபடியும் ஆஸ்பத் திரியிலிருந்து ஒடிஞர். சிறிது பொழுதில் காதரவென்று பார்வதியை இழுத்துக்கொண்டு வந்து அங்கே கிறுத்தி, 'இதோ, பாடீ, முண்டம்! பார், கண்ணேத் திறந்து பார். நீ பூட்டி வைத்துக் காப்பாற்றிய ஜயராமனே அக்கினி பக வான் விழுங்கிவிட்டானென்று எண்ணிக்கொள். இத்தப் புண்ணியவான் மறுபடியும் உயிர் கொடுத்து இவனைப் பெற்றுவிட்டார். இனிமேல் இவன் நம்முடைய பிள்ளை அல்ல; இந்த மகாபுருஷன் பிள்ளை. இவர்களைப் பிரித்து வைத்தால் ஏழேழு ஜன்மத்துக்கும் பாவம் வந்து சம்ப விக்கும்.இந்த மகாது பாவனுடைய அன்புக்கு அக்கினியே சாட்சி சொல்லுமே!’ என்று உணர்ச்சி வசப்பட்டு வேக

மாகப் பேசினர்.

மயக்கத்திலிருந்து தெளிந்து சிறிது கோமே ஆகி யிருந்த பார்வதியின் கண்கள் மெல்ல எதிரே படுக்கையிற் கிடந்த உத்தம புருஷரையும், அவர் பக்கத்தில் காலன் வாயிலிருந்து மீண்டு அமர்ந்திருக்கும் குழக்கையையும் பார்த்தன.

அவளை அறியாமலே அவள் கைகள் கன்னத்தில் அடித்துக்கொண்டன; இரண்டு பாதங்களையும் தொட் டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டன. மலர்களால் அர்ச்சனே செய்யும் கிலேயில் அவள் இல்லே. ஆளுல் அவளது மலர் விழியிலிருந்து அந்தப் புண்பட்ட அடிகளின்மேல் முத்துக்

கள் உதிர்க் தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/130&oldid=535369" இலிருந்து மீள்விக்கப்பட்டது