பக்கம்:அறுந்த தந்தி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அறுந்த தந்தி

இந்த மனிதன் சிரஞ்சீவிப் பட்டம் பெற்றவன் என்று சொல்லிப் போற்றிய மனித பரம்பரை இப்போது அடி யோடு போய்விட்டது. அவனுடைய முதற் குடும்பத்தில் உற்பவித்தவர்களின் போர்களுக்குப் போர்கள் வாழும் காலம் இது. இப்போது அவனேக் கண்டு எல்லோருக்கும் பயம் உண்டாகிவிட்டது. அவனே அனுகவும் அஞ்சினர் கள். இவன் துடைகாலி. தன் குடும்பத்தில் ஒவ்வொருக் தராகத் தொலைத்துவிட்டுத் தனி மாம்போல் கிற்கிருன்’ என்று ஏச ஆரம்பித்தார்கள். பெண் கேட்கப் போனல், ‘இவன் ஜாதகம் களத்திர தோஷம் உள்ளது. பல மனேவி களை இழந்துவிடும் பாக்கியவான் இவன்!” என்று சொல்லி யாவரும் துார விலகினர்கள். -

அவன் தன் ஆயுளில் நுாறு வருஷங்களை ஒருவாறு கடந்துவிட்டான். அந்த நூறு வருஷங்களையும் கினேத்துப் பார்த்தான். தன்னைத் தெய்வமாகக் கொண்டாடிய முதற் குடும்பத்தைப்பற்றி எண்ணியபோது, அவர்கள் இப் பொழுது இருந்தால் எவ்வளவு என்ருக இருக்கும்! என்று கிரீனத்து ஏங்கினன். தன் உயிருக்கும் உயிராக இருந்த இரண்டாவது மனைவியைப் பறி கொடுத்த துக் கத்தை எண்ணியபோதோ அவன் உடம்பெல்லாம் நடுன் கியது. மாண தேவதை தன்னைப் பழி வாங்குகிறதோ என்று எண்ணி எண்ணி கைந்தான்.

'கடவுளே, நான் வாழவேண்டும். வாழ்வதற்குச் செளகரியம் வேண்டும். தன்னத்தனியணுக எப்படி வாழ முடி யும்? என்னிடம் அன்பு பாராட்டவும் நான் என் அன்பை வைத்துப் போற்றவும் ஒருவர் இந்த உலகத்தில் கிடைக்க வில்லையே' என்ற அவ்ன் தெய்வத்தை நினைத்து உருகிய போது, பகவான் அவனுக்கு முன்னே பிரத்தியக. மானுன்.

பிரபோ, கல்ல சமயத்தில் எழுந்தருளினீர்கள். என் வேண்டுகோளை நிறைவேற்றவேண்டும்’ என்று காலில் விழுந்து எழுத்து பிரார்த்தித்தான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/137&oldid=535376" இலிருந்து மீள்விக்கப்பட்டது