பக்கம்:அறுந்த தந்தி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரம் 133

அவன் தனியனைன். இப்போது அவன் அந்தத் தனி மையை உணர்ந்து உணர்ந்து அடைந்த வேதனை சொல் லத் தரமல்ல. தன் காதலியோடு தானும் மரணமடைங் திருந்தால் எவ்வளவு நன்ருக இருந்திருக்கும் என்றுகூட எண்ணிஞன். மற்றவர்கள் நோய் வந்ததற்காகத் துயர் அடைவார்கள். அவனே தனக்குத் தளர்ச்சியும் நோயும் வாவில்லையே என்று அங்கலாய்த்தான். மாணத்தைப் போன்ற துன்பம் வேறு இல்லை என்று எண்ணும் உலகத் தில் தன் காதலியோடு சேர்ந்து இறப்பதானுல் அந்த மா ணத்தை அவன் வரவேற்ருன்.

பாவம்! தன்னுடைய நாற்றைம்பதாவது வயசிலும் அவன் உலக வாழ்க்கையின் இன்பத்தை முழுவதும் நுகர்ந்தானென்று சொல்வதற்கில்லை. உலகம் அவனே விட்டு வேகமாய்ப் போய்க்கொண்டே இருந்தது. அந்த வேகத்தை அவளுல் பிடிக்க முடியவில்லை. அவன் ஆமை யைப்போல் ஊர்ந்துகொண் டிருந்தான். அவ்வப்போது பிரயாணப் பாதையிலே அவனே அனுகுகிறவர்களெல்லாம் சில நிமிஷங்களே அவன் கண்ணிற்குப் பட்டுப் பிறகு காணுமல் போய்விட்டார்கள். கிரந்தரமான அன்பு, கிரந்தரமான சுகம் ஒன்றும் அவனுக்கு இல்லை. அவன் கித்தியத்துவத்தைத் தவங்கிடந்து பெற்ருன். ஆனல் உலகம் அவனே கூAணத்துக்கு கூ%ணம் மறந்துவிட்டுச் சென்றது. அவன் இறக்கவில்லை என்பது உண்மைதான்; ஆளுல் அவனேச் சுற்றிலும் உள்ள எல்லாம் இறந்துகொண் டிருந்தன. அவன் இறந்து புதிய உலகத்துக்குச் செல்ல வில்லை. ஆனல் அவனுக்கு முன்னே புதிய புதிய உலகங் கள் வந்துகொண் டிருந்தன. ஆகவே உலகத்துக்கும் அவனுக்கும் ஒட்டுதல் இல்லை; ப்ற்றில்லை; உலகத்தில் இருந்தும் அவன் வாழவில்லை. ஐயோ பரிதாபம்!

5

இருநூறு வருஷங்கள் ஆயின. உலகத்தில் ஜீவராசி கள் நிரம்பியிருந்தும் அவனுக்கு எல்லாம் சுகொடாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/140&oldid=535379" இலிருந்து மீள்விக்கப்பட்டது