பக்கம்:அறுந்த தந்தி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138. - அறுந்த தந்தி

பயங்கரமான உருவத்தோடு யமாாஜன் சிரஞ்சீவியின் எதிரே தோன்றினன்; உனக்கு என்ன வேண்டும்??? என்று இடிக்குரலிலே அவன் கேட்டான்.

‘எம்பெருமானே, எனக்கு மரணம் வேண்டும்; இந்த கூணத்திலே மரணம் வேண்டும்' என்று விநயத்தோடு விண்ணப்பித்துக்கொண்டான் மனிதன்.

"மரணமா? உனக்கு மரணம் இன்னும் எழுநூறு வருஷங்களுக்கு அப்புறம்ல்லவா விதித்திருக்கிறது? அதற் குள் மரணத்தைக் கேட்கிருயே! மாணம் அவ்வளவு சுலப மாகக் கிடைக்கக் கூடியதா? தேவர்களுக்குக்கூட எளிதில் கிடையாத பொருளாயிற்றே அது?’ என்று சொன்னபோதே கட்டடம் முழுவதும் கிடுகிடுத்தது.

'தர்ம ராஜாவே, மரணத்தின் பெருமையை என் னைப்போல உணர்ந்துகொண்டவர்கள் இந்த உலகத்திலே வேறு யாரும் இருக்கமாட்டார்கள். மரணம் வேண்டும், மாணம் வேண்டும் என்ற தாகம் எனக்கு மிதமிஞ்சியிருக் கிறது. வேண்டாதவர்களுக்கெல்லாம் அதை அளித்துக் கஷ்டப்படுத்துகிருய் என்று உலகம் உன்னைப் பழிக்கி றதே; நான் இப்போது அதை வேண்டுகிறேன்; என் மனப்பூர்வமாக வேண்டுகிறேன். தேவர்கள் அமிர்தத்துக் காகத் தவம் செய்ததுபோல நான் மாணத்துக்காகத் தவம் புரிந்துகொண் டிருக்கிறேன். என் தவம் பலித்து மாண, தெய்வத்தைத் தரிசனம் செய்யும் பாக்கியம் இதோ எனக்குக் கிடைத்திருக்கிறது. தர்மராஜாவே, தென் றிசைக் கடவுளே, மிருக்யுதேவனே, உன் கருணை வெள் ளம் என்மேல் பாயட்டும்; என்னுடைய தீர்க்காயுளென் லும் காகத்திலிருந்து என்னைக் கரையேற்றட்டும். உன்னு டைய திருக்காத்திலுள்ள பாசத்தை என் மேல் வீசு. சர்வாங்க சுந்தரி ஒருத்தியின் மனமாலையைப்போல அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னேக் காப் பாற்று; எனக்கு மரணத்தைத் தா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/145&oldid=535384" இலிருந்து மீள்விக்கப்பட்டது