பக்கம்:அறுந்த தந்தி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரம் - 139

அவனுக்கு இருந்த ஆத்திரத்தில் அவன் என்ன என்னவோ சொல்லிக் கதறித் தீர்த்துவிட்டான். கடைசி யில் அலுத்துப் போய் மூர்ச்சையானன்.

மூர்ச்சை தெளிந்து விழித்தபோது வைவஸ்வதனேக் காணவில்லை; அவன் மறைந்துவிட்டான். எங்கிருந்தோ ஒரு பயங்கரமான சிரிப்பொலி மாத்திரம் அவன் காதில் ஒலித்தது. -

அவன் மூர்ச்சை தெளிந்தபொழுது உடம்பில் ஒர் ஆனந்த உணர்ச்சியைக் கண்டான். அவன் துரங்கி எவ்வ ளவோ காலங்கள் ஆயின. மூர்ச்சையாக இருந்தபோது அவன் தூக்கத்தைக்காட்டிலும் சிறந்த இன்பத்தை அடைத்தான்; சில நிமிஷகோம் மரணத்தின் சுவையை உணர்ந்தவனப்போல இருந்தான். 'ஆஹா! என்ன இன் பம்! மாணதேவனின் தரிசன மாத்திரத்தில் கிடைத்த இங்க இன்பமே இப்படி இருந்தால், அவனுடைய முழு அருளும் கிடைத்தால் எப்படி இருக்கும்!” என்று அவன் கற்பனை செய்யலாளுன்.

காலம் போய்க்கொண்டிருந்தது. அவன் மெளனியாக இருந்தான். உலகம் அவனை விட்டு நெடுர்துராம் விலகிப் போய்க்கொண் டிருந்தது. மனிதர்களோடு பழகாததனுல் அவனுக்குப் பாஷை புரியவில்லை; பழக்க வழக்கங்கள் விளங்கவில்லை. எல்லாவற்றிலும் அவன் தனி மனித கைவே, தனிப் பிராணியாகவே இருக்கலானன்.

அவனுடைய ஆயுளில் நாலு நாற்ருண்டுகள் கிரம்பி விட்டன. இப்போது அவனுக்கு உலகமே புரிபடவில்லை. மனிதர்களோடு கலந்து பழகாமையால், அவர்கள் எண் ணங்களோடு செல்ல இயலவில்லை; அவர்கள் பாஷையே மாறிவிட்டது. பழங்காலத்தில், நானூறு வருஷங்களுக்கு முன் அவனுக்குப் பழக்கமாகிய காய்மொழியை அவன் கேட்கவில்லை. அவர்கள் சத்தமெல்லாம் விசித்திர ஒலியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/146&oldid=535385" இலிருந்து மீள்விக்கப்பட்டது