பக்கம்:அறுந்த தந்தி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரம் 143.

வாம், அமர வாழ்வு! மரணத்தாலே கனியாத வாழ்வுக்குச் சுவை ஏது? அமிர்தம் உண்ட தேவர்கள் ஏமாந்து போய் விட்டார்கள். ஐயோ! அவர்கள் எஞ்சையல்லவா உட்கொண் டிருக்கிருர்கள்? மனித உலகம் மரணத்தைப் பெற்றதோ பிழைத்ததோ! மாணம்-அதுதான் தெய்வம்; அதுதான் இன்பம் ; அதுதான் மோrம்.'

மறுபடி ஒரு சிந்தனைச் சுருள் : 'அமிர்தம் உண்ட தேவர்களுக்கு முன்பு மகாதேவன் நஞ்சை உண்டான். அவன்தான் பேரின்ப உருவம் ; மரணத்தின் தலையிலே ஆனந்த தாண்டவம் இடும் கோலாகல மூர்த்தி; கால காலன்.’’ இப்படி எண்ணினவுடனே அவனுக்கு ஞானே. தயமானது போல ஒர் உணர்ச்சி உண்டாயிற்று. அட, என்ன காரியம் செய்தோம்! காலனே நோக்கித் தவம் கிடக் தோமே ; காலகாலனே, சர்வலோகத்துக்கும் தன்னுடைய மகாசங்காரத்தாலே ஒய்வு தந்த துரங்கவைத்து, வேறு வேலையில்லாமையால் அந்தத் தனிமையிலே அன்னே பாா சக்தியுடன் ஆனந்த தாண்டவம் புரியும் மகாப்பிரபுவை மறந்துபோனுேமே! எல்லாவற்றையும் அழிக்கும் ஆற்ற லுடைய அப்பெருமானுடைய தியானந்தான் இனி நமக்கு. வழி. அடங்கும் வழி அதுதான்; கடைசியில் முடங்கும் வழியும் அதுவே' என்ற திடசங்கற்பத்திலே அவ்ன் வைராக்கியத்தை ஊன்றிக்கொண்டு காலகால மூர்த்தியின் தியானத்திலே ஆழ்ந்தான். காலகால, மாணம் தா, கால கால, மாணப்பிச்சை தா’’ என்பதுவே அவன் தியான மந்திரமாயிற்று.

என்ன ஆச்சரியம் ! அவன் கண்ணே மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தான்; கண்ணேத் திறக்கவே இல்லை. உடம்பு அசையவில்லை ; உள்ளம் மாத்திரம் குமுறிக்கொண் டிருந்தது. உணவும் மறந்தான். பிறகு உள்ளமும் ஒயத் தொடங்கியது. காலகால, மாணப்பிச்சை தா’ என்ற மங் திரமயமாக ஆகிவிட்டான் அவன். இவ்வளவு நாட்களாக அவனுக்குக் காலம் கடத்துவது மிகவும் வேதனையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/150&oldid=535389" இலிருந்து மீள்விக்கப்பட்டது