பக்கம்:அறுந்த தந்தி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரம் 145

சடையும், பவழம்போல் மேனியில் பால் வெண்ணிறும், இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் உடைய அற் புதத் திருக்கோலம்! ஆஹா! மகாகாலகால சர்வ சங்காா தாண்டவமூர்த்தி வந்துவிட்டார்.

'என் அப்பனே! காலகாலனே! மாணப்பிச்சை தா!' என்று அடி நாபியிலிருந்து தொனி எழுந்தது. மகா தேவர் தம்முடைய சூலத்தின் துனியால், மரணப்பிச்சை யாசித்து அலந்து கிற்கும் அந்த உடலைத் தொட்டார். 'அப்பனே! உய்ந்தேன்' என்ற உள்ளொலி அந்தப் போருளாளர் காதில் மட்டுந்தான் விழுந்திருக்க வேண்டும்.

உடம்பிலிருந்து உயிர் பிரிந்தது. காலகாலனது குலத் தின் ஸ்பரிசம் சாகும் வரம் தந்துவிட்டது. உயிர் முக்தி அடைந்தது. சரியாக ஆயிரம் ஆண்டுகள் அந்தக் கணத் தோடு முடிந்தன.

அறு. 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/152&oldid=535391" இலிருந்து மீள்விக்கப்பட்டது