பக்கம்:அறுந்த தந்தி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீலப் பந்து 149

"இங்கே பாருடா: நீல நிறப் பந்து; உன் பந்து இப் படி இருக்குமா?' என்று கர்வத்தோடு அதைக் காட்டிய படி மாணிக்கம் கேட்டான். வேலன் அவனேவிட இரண்டு வயசு பெரியவன். -

ಟ್ಗ! உங்கப்பா இதை எங்கேருந்து கொண்டாக்" தாரோ!' என்று ஏளனமாகச் சொன்னன் வேலன்.

'கடையிலிருந்துதான் வாங்கிக்கிட்டு வந்தார்’ என்று மாணிக்கம் பதில் சொன்னன்.

'இதைப் பாத்தா, புதிசு மாதிரி இல்லையே! பழைய பக்திலே வர்ணம் பூசினது போலே இருக்கு.”

'இதுவா பழைய பந்து? இதோ நல்லாப் பாரு' என்று ஆத்திரத்தில் அந்த இளம்பிள்ளை நீலப் பங்தை வேலன் கையில் கொடுத்தான்.

அதை அவன் கையில் உருட்டிப் பார்த்து எதையோ கண்டுபிடித்தவன்போல், ஆ! இது என் பந்துன்ன!” என்று கூவினன். இதோ கறுப்பா யிருக்குதே, நெருப் புச் சுட்டது. அண்ணேக்கி வெந்நீரடுப்புலே பட்டு வெந்து போன இடம் இது’’ என்ருன்.

மாணிக்கம், டேய், உன் பந்து நீலப் பந்தாடா?’’ என்று ஆத்திாமும் அழுகையும் பொங்கி வரக் கேட் L-fréðT.

அதற்கு வேலன், எங்கம்மா கிட்டே சொல்றேன்” என்றபடியே வேகமாக அதை எடுத்துக்கொண்டு தன் வீட் க்ெகுள் நுழைந்தான். அவன் பின்னலே மாணிக்கமும் ஒடி

- ஞன. W

'அம்மா அம்மா! என் பந்துதானே இது? நீ பாக் துச் சொல்லு' என்ருன் வேலன்.

'இல்லே இல்லே; எங்கப்பா வாங்கியாக்து தந்தார்.

குடுத்திடு அதை’ என்று அழுதான் மாணிக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/156&oldid=535395" இலிருந்து மீள்விக்கப்பட்டது