பக்கம்:அறுந்த தந்தி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அறுந்த தந்தி

வேலன் காய் அதை வாங்கிப் பார்த்தாள். அவள் பிள்ளையின் பந்துதான் அது. அந்தச் சுட்ட அடையா ளம் ஒன்றே போதுமே பின்னே லேச் சாயம் எப்படி வங் தது? முதலியார் வேண்டுமென்றே நீலச் சாயம் கோய்த்

"திருக்கிரு.ர்.

3.

இதே சாக்காக இரண்டு விட்டுக்கும் சண்டை மூண்டது. முதலில் பெண்களுக்குள் முன் காண்டங்கள் ஆயின.

கொளங்தைக்குக் காசு போட்டுப் பந்து வாங்கி யாக்தா, அதை ஒருத்தி புடுங்கி வச்சுக்கவாவது ' என்று மாணிக்கத்தின் தாய் ஆரம்பித்து வைத்தாள்.

"ஆமாம், புத்தம் புதிசு! புதுக் கருக்கு அளியல்லை, பாவம் வெக்கங்கெட்டுப் போய்ப் பேச வராங்க. எம் புள்ளை கூடக் கண்டுபிடிச்சுட்டுது, சுட்ட அடையாளத் தைக் கண்டு. நீலத்திலே தோச்சுப்பிட்டாங்காட்டியும் வேறே பந்தாயிடுமா?' என்று அடுத்த வீட்டிலிருந்து வந்தது குரல்.

பெண்களுக்குள் சண்டை, ஆண்களுக்குள் மனஸ்தா பம். ஆனல் நஷ்டம் என்னவோ குழந்தை மாணிக்கத்துக் குத்தான். அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த பந்து இப் போது போய்விட்ட்து. அதோடு கின்றதா? விதியிலே விளையாடப் போனுல் பையன்களெல்லாம், திருடன்’ என்ற பட்டம் வேறு கொடுத்துவிட்டார்கள். அவன் இளைய உள்ளத்தில் இன்னதென்று விவரிக்க முடியாக ஒரு வேதனே.

விஷயம் இதுதான்: முதலியார் கொல்லைப்புறத்தில் குளித்துக்கொண் டிருந்தபோது அங்கே வந்து விழுந்த பக்தை யாருடையதென்று ஆராய்ச்சி செய்ய அவர் முற் படவில்லை. அடிக்கடி பந்தைப்பற்றித் தம் மகன் நச்சும் போது, அந்த நச்சைத் தீர்க்கக் கடவுளே அந்தப் பந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/157&oldid=535396" இலிருந்து மீள்விக்கப்பட்டது