பக்கம்:அறுந்த தந்தி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுந்த தந்தி 9.

யத்தைப் பிடித்துவிட்டவரைப்போல அவர் உள்ளம் கிளர்ந் தெழுந்தது. இந்த வருஷம் பொங்கல் எல்லா விதத்திலும் பொங்கலாக இருக்கப் போகிறது.

தமக்கு மிகவும் அந்தாங்கமான சில நண்பர்களை மாத் திரம் அன்று விட்டுக்கு வரும்படி அழைத்திருந்தார். தம் குருனாகரையும் அவர் குடும்பத்தினரையும் தம் விட்டிலே

அன்று பொங்கல் கொண்டாட வேண்டுமென்று அழைத்தார். இவ்வளவு பேருக்கும் விருந்திடத் தம் முடைய மனைவிக்குச் சகாயமாக இருப்பதற்காக

உள்ளூரிலே இருந்த தம்முடைய தங்கையையும் அவள் புருஷரையும் அழைத்திருந்தார். இப்படியும் அப்படியு ழாக ஆண்களும் பெண்களும் சேர்ந்து பத்துப் பன்னிரண்டு பேர்கள் கூடுவார்களென்று தோற்றியது.

பொங்கல் திருநாள்-உத்தாாயணத்தில் முதல் நாள் -சூரியன் உதயமானன். சர்மா உதயத்துக்கு முன்பே எழுந்து தம் ஆசிரியர் விட்டுக்குப் போய் எல்லோரையும் ஒரு வண்டியில் அழைத்து வந்தார். முதல் நாளே சர்மாவின் தங்கை தன் புருஷனுடனும் நான்கு வயதுள்ள தன் ஆண் குழந்தையுடனும் வந்துவிட்டாள். பொங்கல் விருந்துக்குப் பலமாகத்தான் ஏற்பாடு ஆகியிருந்தது. -

சாயங்காலம் 490,یے மணிக்குமேல் கீர்த்தனம் அாங் கேற்றுவதாகச் சர்ம்ா சொல்லியிருந்தார். மத்தியான்ன விருந்து ஆயிற்று. என்ன கீர்த்தினம்? யார் விஷயமாக உள்ளது?’ என்று குருமூர்த்தி ஐயர் சர்மாவைக் கேட் டார். ஆண்டவன் வடிவேலன் விஷயமானதுதான்; கல் யாணி ராகம். மற்ற விஷயங்களைப் பாடும்போது தெரிந்து கொள்ளலாம். இப்போது சொன்னல் ஸ்வாரஸ்யம் குறைந்துவிடும்.’’ என்ருர் சர்மா.

இது புதுமாதிரியான பேச்சாக இருந்தது, ஆசிரிய ருக்கு. பேஷ்! நீயே விளம்பர வித்தையைக் கற்றுக் கொண்டுவிட்டாயே. அப்படித்தான் இருக்க வேண்டும்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/16&oldid=535257" இலிருந்து மீள்விக்கப்பட்டது