பக்கம்:அறுந்த தந்தி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卫拉尘 அறுந்த தந்தி

சந்தோஷிக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் பார்த்கா யிற்று. வாழ்க்கையில் அவ்ளுக்கு ஒரு குறைவும் இல்லை. வயசு எண்பதுக்குமேல் ஆகியும் பாட்டியின் திடத் திற்குக் குறைவில்லை. பேச்சு வெடுக்கு வெடுக்கென்று வரும்போது அவளுடைய பேத்திகூட காணமடைய வேண்டும். இந்தக் காலத்து நோஞ்சான்களை ப்பற்றி அவள் பரிகாசம் பண்ணிக் கேட்கவேண்டும் : எத்தனையோ ரஸ் மாக இருக்கும். உள்ளதைத்தான் சொல்வாள் ; ஆனல் சொல்லும் தோரணையிலே ஒரு தனிச் சுவை ப்டர்க் திருக்கும்.

பாட்டிக்கு ஆசை அதிகம் இல்லை; வாய்க்கு ருசியான பதார்த்தங்களில் மாத்திரம் இன்னும் சபலம் போகவில்லை. அவைகளிலும் கத்திரிக்காய் என்ருல் அவளுக்குப் பிரா னன். ஊரில் யார் வீட்டில் கத்திரிக்காய் சமைத்தாலும் முதல் கைவேத்தியம் அவளுக்குத்தான். அந்த நிவே தனத்திற்குக் கைமேல் பலன் கிடைத்துவிடும். அருமையான கதை ஒன்று அவள் திருவாக்கிலிருந்து அன்று உதய மாகும்.

அவளுடைய போன் எங்கேயோ ஒரு கத்திரிச்செடி வாங்கிவந்து தன் வீட்டில் கட்டான். 'பாட்டி, இந்தச் செடி காய்க்கட்டும்; உனக்கு இளம் பிஞ்சாக அப்படியே பறித்துவந்து கறி பண்ணிப் போடச் சொல்லுகிறேன்’ என்று அவன் சொல்வான். அப்பொழுது பாட்டியின் நாக்கில் நீர் சுரக்கும். தன் போன் கையால் நட்ட கத்திரிச் செடி காய்த்துக் கறி பண்ணிச் சாப்பிடவேண்டுமென்ற ஆசை அவள் மனசில் இடங்கொண்டது. அதுவரையிலும் இல்லாத சபலம் அவளுக்கு உண்டாயிற்று. இந்த உலகத் தில் வேறு ஒரு பொருளும் சுவை உடையதாகத் தோன்ற வில்லை. அவ்வளவு தாரம் அவளுடைய ஆசை இங்கி கின்றது.

கத்திரிச்செடி தளிர்த்து இலை விட்டது; தளதள வென்று வளர்ந்தது. ஆளுல் அந்தச் செடி வந்த வேளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/161&oldid=535400" இலிருந்து மீள்விக்கப்பட்டது