பக்கம்:அறுந்த தந்தி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும் 155

நல்ல வேளையாகத் தோன்றவில்லை. என்றைக்குப் போன் அதைக் கொண்டுவந்து நட்டானே அன்றைக்கே என்றும் இல்லாதபடி பாட்டிக்குக் கொஞ்சம் தலைவலி உண்டாயிற்று. தன் வாழ்நாளில் பற்று அரைத்துப் போட்டுக்கொண்ட வள் அல்ல அவள். தலைவலியைப் பொறுத்துக்கொண் டிருந்தாள். மறுநாள் கலேவலி கொஞ்சம் படிமானத்துக்கு வந்தது ; ஆல்ை உடம்பு சுடத்தொடங்கியது. ஜ்வரம் வக் இருக்கிறதென்று அவள் தெரிந்துகொண்டாள். வயசு காலத்தில், வியாதியே வராதவர்களுக்கு ஏதாவது நோய் வந்தால் அது நல்ல காலத்திற்கல்ல என்பதைப் பாட்டி எவ்வளவோ பேருக்கு எடுத்துச் சொல்லியிருக்கிருள். இப் போது அவள் விஷயத்திலேயே அந்த விதியைப் பொருத் திப் பார்க்கும் காலம் வந்துவிட்டது.

தனக்கு உடம்பு சரியில்லாமல் இருப்பது அவளுக்குக் கவலை கொடுக்கவில்லை. அவள் கைலாச யாத்திரை செய் யத் தயாராகவே இருந்தாள். நிச்சயமாகத் தனக்குக் கைலாசத்தில் ஒர் இடம் உண்டு என்பதிலும் அவளுக்குச் சந்தேகம் இல்லை. ஆணுல், தன்னுடைய அருமைப் போன் கட்டுவளர்த்தகத்திரிச்செடி காய்த்து, அந்தக் காயைத் தின் ளுமல் உயிர்விட அவளுக்கு இஷ்டமில்லை. இன்றுவிட்டே சாகவேண்டும் என்று, சிவபெருமான் திருகாமத்தைச் சொல்லிச் சங்கற்பம் செய்துகொண்டாள். எவ்வளவோ பேர்களைக் கதை சொல்லி மயக்கும் தந்திரம் வல்ல அவள், யமகிங்கரர்களையும் கதை சொல்லி மயக்கலாம் T ஆ) எண்ணினுள். ஆனல் அதற்குமுன், தன் ೪-೯ಾಹ கொண்டு போக விரும் கூற்றுவன் தன் கண்ணுக்குத் தெரியவேண் டுமே! சிவபக்தர்களுடைய கண்ணுக்குக் காலன் புலப்படு வான் என்பதை அவள் கேட்டிருக்கிருள். சிவகாமத்தை மூச்சுவிடாமல் கேர்டிக்கணக்காக உருவேற்றின பாட்டி சிவபக்தைகளில் முன்கிற்கக் கூடியவளாயிற்றே. சிவபிரான் தன்னைக் கைவிட மாட்டார் என்ற திண்ணிய எண்ணம் அவளுக்கு இருந்தது. மேலும் சிவகாமத்தை ஜபிக்கக்

தாடங்கிளுள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/162&oldid=535401" இலிருந்து மீள்விக்கப்பட்டது