பக்கம்:அறுந்த தந்தி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும் 159,

2

அளகாபுரி அளகாபுரி என்ற பட்டணத்தில் அள கேசன் அளகேசன் என்ற அரசன் அரசாட்சி புரிந்து வந்தான். தர்ம நியாயம் தவருமல் ராஜ்யபரிபாலனம் செய்து வந்தாலும் அவன் பூர்வ ஜன்மத்தில் எருமைக் கடாவுக்குத் தீனி போடாமல் வதைத்தமையால் புத்திர பாக்கியம் இல்லாமல் பல காலம் தவம் செய்தான். கடைசி யில் சிவபிரான் திருவருளால் ஒரு புத்திான் பிறந்தான். அவன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வக்தாலும் அக்ஷராப்பியாசம், யானேயேற்றம், குதிரையேற்றம் முதலாகிய ராஜகுமானுக்கு ஏற்பட்ட கர்ரியங்களில் மனசு போகாமல், சாப்பிடுவதும் தூங்கு வதுமாகவே காலத்தைப் போக்கிவந்தான். ராஜலக்ஷணத் தில் ஒன்றும் குறைவில்லாமல், கண்டோர் கருத்தை வசி கரிக்கும் வடிவமுள்ளவகை இருந்தும், அஸ்திர சஸ்திர வித்தைகளில் பயிற்சி இல்லாமல் பெண் பிள்ளையைப் போல அந்தப்புரத்திலே உள்ள வேலைக்காரிகளோடு விளை யாடிக்கொண்டே நாள் முழுவதும் கழிக்கலானன்.

தவம் செய்து பெற்ற பிள்ளை இப்படிச் சாதுவாகவும் சுறுசுறுப்பு இல்லாதவனுகவும் இருப்பதைக் கண்ட அள கேசன் என்னும் மன்னனுக்கு வாவாக் கவலே அதிகரித்து. வந்தது. இந்தப் பிள்ளையால் நம்முடைய குலம் விளங். கும் என்று கினைத்தோமே ; ராஜவம்சத்தில் பிறந்தும் அதற்கேற்ற வீரம் இல்லாமல் இருக்கிருனே! இவன் போருக்குப் போகாவிட்டாலும் ராஜ்யபாரத்தையாவது வகிப்பான ? வகிப்பானென்று தோன்றவில்லையே! இவன் வகிக்காவிட்டாலும் இவனுக்கு மதியூகியாகிய பெண் ஒருத்தியை விவாகம் செய்து வைத்து அவள் மூலமாக ராஜகாரியங்கள் நடைபெறும்படி செய்யலாம் என்ருலோ,. இவனே விரும்பி வரும் பெண் யார் இருக்கிருள்? ஆள் அழகனுக இருந்து என்ன பிரயோஜனம்? ஆண்மை இல் லாதவனே ஆண் என்று எப்படிச் சொல்வது?’ என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/166&oldid=535405" இலிருந்து மீள்விக்கப்பட்டது