பக்கம்:அறுந்த தந்தி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அறுந்த தந்தி

துணைக்கு ஒருவரும் வேண்டாம்'

கூறினன் ராஜகுமாரன்.

என்று ஆசை ததும்பக்

அளகேச ராஜனுக்குச் சிரிப்பு வந்தது. "மகிஷ வாக னர்தான இவனுக்குப் பிரியமானது?' என்று இகழ்ந் தான். வேறு வழி இல்லாமையால் பரமசிவனேத் தியானித் துக்கொண்டு, ராஜகுமாரன் சொன்னபடியே அவன் பிர யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான். நல்ல நாள் ஒன்று பார்த்துப் பிரயாணத்தை ஆரம்பிக்கச் சொன் ஞன். அன்றைக்கு அரசன் மிகவும் கவலையோடு தன் குமாரனே த் தழுவிக்கொண்டு அவன் கையில் ஒரு விபூதிப் பையைக் கொடுத்து, 'குழந்தாய், உனக்கு யாரும் துணை வேண்டாம் என்று சொல்லிவிட்டாய். பரமசிவன்தான் உனக்குத் துணையாக இருக்கவேண்டும். இந்தப் பையி அலுள்ள விபூதியை அடிக்கடி நெற்றியில் இட்டுக்கொள். சிவநாமத்தை அடிக்கடி சொல். அதிகமாக யாரிடமும் பேச்சுக் கொடுக்காதே’ என்று புத்திமதி கூறி வழி

ராஜகுமாரன் எருமை மாடு பூட்டிய மொட்டை வண்டியில் புறப்பட்டான். அந்தத் தேசத்தில் உள்ளவர் கள் தங்கள் ராஜகுமாரன் இந்த அருமையான மதத்தில் ஆரோகணம் செய்து வருவதைப் பார்த்துப் பரிகாசம் செய்தார்கள். ஆனுலும் அந்த ராஜகுமாரனுடைய இயல்பை முன்பே அறிந்தவர்களாகையால் அதில் ஒன்றும் ஆச்சரியம் தோன்றவில்லை. ராஜகுமாரன் தன் நெற்றியில் அழிந்த போதெல்லாம் விபூதிய்ை இட்டுக்கொண்டும், சிவ நாமத்தை உச்சரித்துக்கொண்டும் உல்லாலமாகப் பிரயா ணம் செய்தான். எருமைக்கடாக்களை உசுப்பிச் சில சம யங்களில் சிறிது வேகமாக ஒட்டினன்; பல சமயங்களில் அந்தப் பிராணிகள் போகும் போக்கிலே விட்டான். எங் தத் திக்கில் போகிருேம், எந்த ஊருக்குப் போகிருேம் என்ற கவலையே இல்லாமல் ாாஜகுமாான் மகிஷ ரதத்தில் போய்க்கொண் டிருந்தான். r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/169&oldid=535408" இலிருந்து மீள்விக்கப்பட்டது