பக்கம்:அறுந்த தந்தி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அறுந்த தந்தி

மாலையில் கூடத்தில் முருகக் கடவுளுடைய படத் துக்கு அலங்காரம் செய்து மாலை போட்டுத் தீபம் ஏற்றி வைத்தார்கள். படத்துக்கு எதிரில் வீணே வைக்கப்பட் டிருந்தது. அதன் மேலே ஒரு சிறிய மல்லிகைச் சாம் போட்டிருக்கார்கள். ஸ்வாமிக்குத் தீபாராதனை செய்யப் போகிருர்கள். அந்தச் சமயத்தில் சர்மாவின் தங்கை குழந்தை, நாலு வயசுள்ள பாலு, எனக்குப் பூ” என்ற கத்திக்கொண்டு ஓடி வந்தவன், அந்த விணேயின் மேலி ருந்த சாத்தைக் கண்டதும் வெகு வேகமாகப் போய் இாண்டு கையாலும் அதை இழுத்தான். அவன் இழுத்த மாதிரியில் வினைத் தந்தியில் விால் அகப்பட்டுப் படி ரென்று தக்தி அறுந்தது. குழந்தை விலென்று கத்தவே, அதை உடனே எடுத்துக்கொண்டு சர்மா முதுகைத் தட்டிக் கொடுக்கலாஞர். இந்தக் காட்சி ஒரு நிமிஷத்தில் கிகழ்ந்தது. வீணேத் தந்தி அறுந்தது கண்டு யாவரும் ஸ்தம்பித்தனர். குழந்தையை அடிக்க அதன் தாய் ஒடி வந்தாள் ; போ, பைத்தியம்! குழந்தை என்ன செய்யும்? புதுத் தங்கி போட்டுவிட்டால் போகிறது. அது பழைய தக்தி; சான் முன்பே கவனித்திருக்க வேண்டும்” என்று சொல்லிக் குழந்தையை அவளிடம் விடாமல் வைத்துக் கொண்டார் சர்மா. குழந்தை, பாவம் ! ஒன்றுமே தோன் ருமல் வெலவெலத்துப்போய் மாமாவின் தோளோடு தோளாக ஒட்டிக்கொண்டது.

'பீடை! நல்ல சமயத்தில் அபசகுனம் மாதிரி, தக்தியை அறுத்துவிட்டது' என்று தங்கை ஆத்தி க் தோடு கத்தினுள்.

நல்ல நாளில் குழந்தையை வையாதே. இப்போது என்ன குடிமுழுகிப் போய்விட்டது? புது மணி ஆறுதான் ஆயிற்று. ஆறு மணிக்கே சாகுகாலம் போய்விடுகிறதென்ற பழைய ஞாபகத்தில் ஆரம்பிக்க இருந்தேன். புதுமணிப் படி ஏழு மணி வரையில் ராகுகாலமென்பதை ஸ்வாமியே ஞாபகமூட்டுகிரு.ர். குழந்தை வேறு, தெய்வம் வேரு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/17&oldid=535258" இலிருந்து மீள்விக்கப்பட்டது