பக்கம்:அறுந்த தந்தி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும் 167

கள். யமதர்மராஜன் பாட்டி சொல்லும் கதையில் ஈடுபட்டிருந்தான். 'கதை முடிந்து விட்டதா?’’ என்று கேட்டான். 'முடிவதா? இப்போதுதானே ஆரம்பமாகியிருக்கிறது!’ என்ருள் பாட்டி.

'கதையை முடித்துவிடு' என்ருன் தர்மாாஜன். ‘'சிரமமாக இருக்கிறது. நாளைக்கு முடிக்கப் பார்க்கி றேன். உனக்கும் வேலை கொடுக்கிறேன். இவ்வ ள வு நேரம் கதை கேட்டாயே. சிவகாம சுந்தரி ஏன் ராஜகுமாானைச் சிவபக்தர்களுக்குள்ளே , சிறந்த வனுக எண்ணினுள்? வாகனங்கூட அவன் சிவபக்தியைத் தெரிவிப்பதாகச் சொன்னுளே, எதற்காக?' என்று கேட் டாள்.

'இதுதான பிரமாதம்?” என்ருன் கர்மராஜன். 'பிரமாதம் அல்ல; இதற்குச் சரியாய் விடை சொல்லி விட்டால் நீ இப்போதே என் உயிரைக் கொண்டுபோக லாம். இல்லாவிட்டால் நாளைக்கு வந்து பாக்கிக் கதையை யும் கேட்டுவிட்டுக் கொண்டுபோகலாம்.'

'அவனுடைய சிவங்ாம ஜபமும் விபூதி காரணமும் கண்டு சிவபக்தியுடையவனுக நினைத்தாள். மகிஷவாகனத் இன் முகத்திலும் விபூதி அணிக்கிருப்பான், ஆளுல்தான் வாகனத்தால்கூட அவன் சிவபக்தி புலப்படுகிறது என் முள்’ என்று யமதர்மராஜன் பதில் சொன்னுன்.

"இதைக் குழந்தைகூடச் சொல்லுமே. இது அல்ல காரணம். யோசித்துப் பார். வேறு காரணம் தெரிகிறதா?’’ தர்மராஜன் யோசித்தான் ; தெரியவில்லை. நீயே சொல்லிவிடு, பாட்டி” என்ருன். -

'அப்படியாகுல் இன்றைக்கு என்ன விட்டுவிட்டு நாளைக்கு சாத்திரி வருகிருயா?”

"அப்படியே ஆகட்டும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/174&oldid=535413" இலிருந்து மீள்விக்கப்பட்டது