பக்கம்:அறுந்த தந்தி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அறுந்த தந்தி

பாட்டி புதிரை விடுவித்தாள். அந்த வண்டியில் காளைமாட்டைப் பூட்டுவது வழக்கமாக இருக்க, ராஜகுமா ான் எருமைக்கடாவைப் பூட்டி வந்ததை ராஜகுமாரி பார்த் தாள். காளைமாடு பரமசிவனுக்கு வாகனம் அல்லவா? அதைப் பூட்டி ஒட்டுவது சிவாபாாதம் என்று அவன் கினைத்து எரும்ை மாட்டைக் கட்டிக்கொண்டு வந்தான் என எண்ணி, அவனைச் சிறந்த சிவபக்தனுக கினைத்தாள்' என்ருள். - *

'பாட்டி, நான் தோல்வி அடைந்தேன். நீ ஜயித்தாய். உன் இஷ்டப்படியே நாளைக்கு ராத்திரி வருகிறேன். நீ நாளைக்கே கதையை முடித்துவிடவேண்டும்' என்ருன் தென்றிசைக்கோன்.

'பார்க்கலாம் அப்பா' என்ருள் பாட்டி. யமன் மறைந்தான்; பொழுதும் விடிந்தது.

4.

அடுத்த கர்ள் ாாத்திரி கூற்றுவன் வந்தான். 'பாட்டி, வந்துவிட்டேன்’ என்று அவள் முன்னே கின்ருன்.

'வா, அப்பா, உன் தரிசனம் சாட்சாத் பரமசிவன் தரிசனத்தைப் போல இருக்கிறது. ஆனல் அவன் கருணு மூர்த்தி; தர்மமே ரிஷபமாக உடையவன். நீயோ லோகத் துக்கு அச்சத்தை உண்டாக்குபவன் ; காரெருமை வாகனம் உடையவன். மற்றப்படி காலனுகிய உனக்கும் மகாகாலனு கிய அவனுக்கும் வித்தியாசமே இல்லை.”

பாட்டி கிண்டல் பண்ணுகிருளென்று யமன் தெரிந்து கொண்டான். இப்போது அவன் அவளிடம் அகப்பட்டுக் கொண்டானே!

'சரி, சீக்கிரம் கதையை முடி' என்ருன் வைவஸ் வதன்.

சொல்ல ஆரம்பிக்கிறேன்; முடிந்தால் உன் அதி ருஷ்டம்' என்று வீறுடன் பேசிக் கதை சொல்லத் தொடங்கிள்ை பாட்டி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/175&oldid=535414" இலிருந்து மீள்விக்கப்பட்டது