பக்கம்:அறுந்த தந்தி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 அறுந்த தந்தி

பாட்டி இதோடு நிறுத்திப் பெருமூச்சு விட்டாள்.

'ஏன் பர்ட்டி, அவர்கள் கல்யாணம் செய்துகொண் டார்கள் என்ற சொல்லிக் கதையை முடித்துவிடுகிறது தானே?’ என்று வந்தது யமதர்மன் குரல்.

"அப்படி இல்லை; கதையை அதன் போக்கிலே விட வேண்டுமே அல்லாமல் நம் போக்கிலே இழுக்கக்கூடாது. இன்னும் கதை இருக்கிறது. கதையில் இது ஒரு கட்டம். இங்கேயும் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்கிருயா?”

'பார்க்கிறேன்' என்று விநயமாகச் சொன்னுன்

ᏯᏋ ITöyüᎢ .

'பார்ப்பது என்ன? இது சாதாரணமான கேள்வி தான். ஆனல் இதை நீ சொல்லாவிட்டால் இன்னும் இரண்டு நாள் எனக்கு வாய்தா தரவேண்டும். அதாவது நாளைக்கு நீ வரக்கூடாது; அதற்கு அடுத்த நாள் வா; கதை கேட்கலாம்.”

சேரி, சரி, கேள்வியைக் கேள், பார்க்கலாம்,'

'ராஜகுமாரி ராஜகுமாரனுடைய அதிசயமான யுக் தியை மெச்சுவதாகச் சொன்னுளே, அது என்ன யுக்தி???

'அதுதான் நீயே சொன் ஞயே; அவன் தன் சிவபக் தியைப் பின்னும் அதிகமாக அவளுக்குத் தெரிவிக்கச் செய்த யுக்திதான்.”

'இதைப் போய்க் கேட்பேன? வேறே யுக்தி உண்டு. யோசித்துப் பார்.

'பாட்டி, எனக்குப் பொறுமை இல்லை. ஒரு நாள் தவணை நேற்றுக் கொடுத்தேன். தலைக்குமேல் போன்பிறகு சாண் போளுல் என்ன? முழம் போளுல் என்ன? நாளை போய் மறுநாள் வருகிறேன். கேள்விக்கு நீயே விடை சொல்லிவிடு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/177&oldid=535416" இலிருந்து மீள்விக்கப்பட்டது