பக்கம்:அறுந்த தந்தி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும் 171

'அப்படி உண்மையிலே தர்மராஜனுக அல்லவா இருக்கவேண்டும்! சரி, நான் சொல்லிவிடுகிறேன். சிவலிங்கம் கல்தானே? அந்தக் கனமான கல்லைக் கொண்டு வந்து வண்டியின் பின்னலே வைத்தால், ராஜகுமாரியும் சிவலிங்கமும் சேர்ந்து பின்பாாம் அதிகமாகிவிடாதா? வண்டியின் ஏர்க்கால் தாக்கி அடிக்காதா? ஆகவே சிவ லிங்கத்தைப் பின்னுல் வைத்தால் ராஜகுமாரி பாரம் சரி யாக இருப்பதற்காக முன்னே நகர்ந்து தன் அருகில் வருவாளென்றும் பின்பாரம் இல்லாமல் அவ அருகே வருவிப்பது கூடாது என்றும் அவன் கினேத்து அந்தத் தந்திரத்தைச் செய்ததாக ராஜகுமாரி எண்ணி ள்ை. வாயினுல் சொல்லாமல் தந்திரமாகத் தன்னே அருகில் வரச் செய்வதற்கு இப்படி யுக்தி செய்பவன் சாமர்த்திய சாலியாகத்தானே இருக்கவேண்டும்? இதுதான் அவள் அப்படிச் சொன்னதற்குக் காரணம்' என்ருள் பாட்டி.

'பாட்டி, நீ மகா சாமர்த்தியக்காரி. சரி, நான் காளை கின்று வருகிறேன்’ என்று யமன் மறைந்தான். பொழுதும் விடிந்தது.

米 혼

மறு நாளுக்கு மறு நாள் இரவு, 'இன்றைக்கு எப்படியாவது உன்னே அழைத்துக்கொண்டு போவதாகவே வந்திருக்கிறேன். ஏமாற்றிவிடாதே, பாட்டி!' என்று சொல்லிக்கொண்டே மரணதேவன் பாட்டியின் எதிரே வந்து கின்ருன். -

'வந்தாயா, அப்பா? நல்ல வேளை : எங்கே கதை முடியாமல் நின்றுவிடுமோ என்று எண்ணியிருந்தேன்; வந்துவிட்டாய்” என்று பாட்டி வரவேற்ருள்.

'வந்துவிட்டேன்; சீக்கிரம் கதையை முடித்துவிட்டு என்னுடன் வா’ என்ருன் யமன். -

'கதையை முடிக்காமல் வாக்கூடாதா?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/178&oldid=535417" இலிருந்து மீள்விக்கப்பட்டது