பக்கம்:அறுந்த தந்தி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையும் கத்திரிக்காயும் 173

"தாங்கள் இவ்வடியாளிடம் ஒரு வார்த்தையாவது பேசக்கூடாதா? தங்களைப் பெற்ற களுல் எந்த நாடு விளக்கம் அடைந்தது தங்களுக்கு அடையாளமாகிப் புனிதமடைந்த திருநாமம் எது ၇ ••

ராஜகுமாரனுக்கு அவள் பேசுவது தெளிவாகத் தெரியவில்லை. சிவநாமத்தையே அடிக்கொரு தரம் சொல் விக்கொண் டிருந்தான். அவளைக் கணத்துக்கு ஒரு முறை பார்த்துப் புன்னகை பூத்தான். அந்த மோகன முறுவல் வலையிலே அவள் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தாள்.

வண்டி ஒரு வேலி ஒரமாகப் போகும்படி சேர்ந்தது. பறங்கியும் பூசணிக்காயும் அக்க வேலிக்கு வெளியே காய்த் திருந்தன. வெள்ளை வெளேரென்று இருந்த பூசணியைப் பார்த்தவுடனே ராஜகுமாானுக்கு விபூதி ஞாபகம் வந்து விட்டது. -

இந்தக் காய் இப்படி விபூதியைப் பூசிக்கொண்டு கிடக்கிறதே. இதுவும் சிவபக்தி உடையதுபோல் இருக் கிறது. அப்படியானல் இதைப் பறித்து நாம் வைத்துக் கொள்ளலாம்’ என்று எண்ணித் திடீரென்று கீழே குதித்து. அந்தச் சாம்பற் பூசணிக்காயைப் பறித்து வந்து தனக்கும் ராஜகுமாரிக்கும் நடுவில் வைத்துக்கொண்டான். அவன் அதை வைத்துவிட்டு வண்டியில் ஏறினவுடன் சுந்தரிக்கு உண்டான ஆவல் கட்டுக்கு மீறிப் போயிற்று.

"என்ன இங்கிதம்! என்ன குறிப்பு! இதோ என்னே ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று ஆவேசம் வத்தவளைப் போல அவன் கையில் தன் கையை வைத்தாள். அவன் தன்னேயும் அறியாமல் அதைப் பற்றிக்கொண்டான். அவள் உடனே அவனத் தழுவினுள். அவனும் தழுவி ன்ை. 'என் ஆருயிர் நாகா, தங்களுக்கு என்னேப் பாணிக் கிரகணம் செய்துகொள்ள வேண்டுமென்ற கருத்து இருப் பதை எவ்வளவு அழகாகக் குறிப்பித்தீர்கள்! எனக்கும் அக்க ஆவல் இருந்தது. ஆனல் சொல்வதற்கு காணமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/180&oldid=535419" இலிருந்து மீள்விக்கப்பட்டது