பக்கம்:அறுந்த தந்தி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 அறுந்த தந்தி

இருந்தது. தாங்களும் வாயால் சொல்லாமலே காரியத் தைச் சாதித்துக் கொண்டீர்கள். இந்தப் பூசணியை நம் மிடையில் வைத்துத் தங்கள் கருத்தைத் தெரிவித்துவிட் டீர்கள். இனி நம்மை யாரும் பிரிக்க முடியாது’ என்று தன்னுடைய ஆனந்தக் கொந்தளிப்பை அவள் வார்த்தை களால் ஒருவாறு வெளிப்படுத்தினுள்.

并 웅 $o 못

பாட்டி இங்கே சிறிது கிறுத்தி யமதர்மராஜனே ஒரு கேள்வி கேட்டாள்.

'அவள் அந்தக் காயைக் கொண்டு எதை அறிந்து கொண்டாள் ? எதற்காக அவ்வளவு குது.ாகலம் அடைக்

தாள் ???

மிருக்யுதேவனல் இந்த முறை தவருகக்கூடக் சொல்ல இயலவில்லை. யோசிக்கவும் பொறுமை இல்லை. போட்டி, பாட்டி, அந்தக் கேள்விகளைத் திருப்பிக் கேட்கி றேன்; பதில் சொல்லு. ஆனல் கதையை இன்றே முடித்துவிடவேண்டும். பதில் சொல்லத் தெரியாததற். காக இன்னும் நாள் தள்ளமாட்டேன்' என்ருன்.

'இதோ சொல்லிவிடுகிறேன். கதையையும் விடிவதற் குள் முடித்துவிடுகிறேன். சரி. இப்போது பூசணிக் காய்க்கு அர்த்தம் சொல்கிறேன். ராஜகுமாரன் பூசணிக் காயைச் சைவக்கோலம் உடையதாகத் தோன்றுவதனல் பறித்துக் கொண்டுவந்து வைத்தானல்லவா? அவன் கருத்தை அவள் கவனிக்கவில்லை. அவள் வேறு அர்த்தம் சய்துகொண்டாள். பூசணிக்காயைக் கல்யாணப் ஆசி ணிைக்காய் என்று சொல்வது உண்டு அல்லவா? நமக்கு நடு வில் கல்யாணம் வேண்டும் என்ற விஷயத்தை வெளிப் படையாகச் சொல்லாமல் குறிப்பாகத் தெரிவிக்கக் கல் யானைப் பூசணியை வைத்தானென்று அவள் நினைத்துக் கொண்டாள். அதனுல்தான் அவளுக்கு அவ்வளவு குது. கலம். இப்போது தெரிந்ததா?” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/181&oldid=535420" இலிருந்து மீள்விக்கப்பட்டது