பக்கம்:அறுந்த தந்தி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அறுந்த தந்தி

வாசலிலே குழாயடிக்குப் பக்கத்தில் மோட்டார் ஷெட்டுக் கூரை கிழவில் வாழ்கிறவள். என் புருசனும் நானும் இந்தக் குழந்தையும் பிச்சைத் தொழிலாலேயே பிழைத்து வருகிருேம்.' -

நான் கேட்ட கேள்வி ஒன்றுதான். மேலே பல கேள்விகளுக்கு இடம் வைத்துக்கொள்ளாமல் எல்லா விஷயங்களையும் சாங்கோபாங்கமாக அவளாகவே சொல்லிவிட்டாள். முடிவில், 'ஐயா, கர்மதுரையே, இந்தக் குழந்தைக்கு மருந்து போடுங்கோ சாt; கடவுள். . . . ” வாக்கியத்தை முடிக்கவில்லை. கண்ணிர் அணை போட்டு விட்டது.

உண்மையைச் சொல்லுகிறேன். அவளுக்கு முன் ேைல நான் தர்மத்தை விளம்பரப்படுத்தும் டாக்டராக இருக்கவில்லை. அவளை முதலிலே கண்டபோதும், அவள் பிச்சைக்காரி என்பதைக் கேட்டபோதும் என் உள்ளத்தில் உண்டான பரிகாச உணர்ச்சி இப்போது மறைந்து விட்டது. இவள் கடவுள் பெயரையும் தர்மத்தின் பெயரையும் சொல்லிப் பிழைக்கிருள் என்கிருேமே! நாம் என்ன வாழ்ந்தோம்! அதோ வெளியில் சுவரில் மாட்டி யிருக்கும் இரும்புத் தகட்டில் கறுப்பு வர்ணத்துக்கு இடையே வெள்ளை எழுத்தில் எழுதியிருக்கும் தர்ம ஆஸ்பத்திரி என்பதே என் உள்ளத்தின் இருட்டையும் அதன் மேலே எழுந்த போலித் தர்ம கினேவையும் வெளிப் படுத்தவில்லையா? தர்மத்தின் பெயரை கிரந்தரமாக நம் வாசலில் தொங்கும்படி ஆணி அடித்து மாட்டியிருக்கி ருேம். இவள் அடிவயிற்றிலிருந்து வரும் குரலில் பாவத் துடன் சொல்லுகிருள். இதுதானே வித்தியாசம்!”

என் உள்ளம் இதுகாறும் உணராத ஒன்றை உணரத் தொடங்கிவிட்டதா, என்ன?

இந்தக் குழந்தைக்கு வைத்தியம் ச்ெய்யப்போனுல். நாம் மருந்து கொடுக்கிருேம். பத்தியமான உணவு வேண்டுமானல், அதற்கு இவள் எங்கே போவாள்?! அன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/25&oldid=535266" இலிருந்து மீள்விக்கப்பட்டது