பக்கம்:அறுந்த தந்தி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - - - அறுந்த தந்தி

சுலபமாக என்னைப் பெரியவனுக்கிவிட்டது; மகாத்மா வாகச் செய்யத் தயாராக இருந்தது. அதைக் கண்டு நான் பிரமிக்கவில்லை. -

'சாமீ, இன்றைக்குக் குழந்தை என்ருகத் துரங்கியது' என்று அந்தப் பிச்சைக்கார மாது சொன்னல், அதுதான் என் சந்தோஷத்துக்குக் காரணமாகும். .

'சாமி, கடவுள்தான் உங்களை எங்களுக்குத் துணை பாக வைத்திருக்கிருர். பிச்சைக்காரர்களுக்கு யார் சாமி, உதவி செய்கிரு.ர்கள்? உங்கள் குஞ்சு குழந்தைகளெல்லாம் சுகமாக இருக்க வேனும்!” என்று அவள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து புறப்படும் நன்றியுரைகளை நான் எந்தத் த்ராசில் கிறுத்துப் பார்ப்பேன்! அந்த வார்த்தைகள் குளிர்ச்சியாக என் காதில் விழும்போது எனக்கு உண் டாகும் இன்பத்துக்குக் காரணம் என்ன? அவள் முக ஸ்துதி செய்கிருளா? அதைக் கேட்டு நான் வீண்பெருமை அடைகிறேன? இல்லை, இல்லை. நான் செய்ய வேண்டிய ஒன்றைச் செய்யாமல் இருக்தேன்; அவள் அதைச் செய் யும்படியான நிலைக்கு என்னேக் கொணர்ந்தாள்; எனக்கு உபதேசித்தாள்; எனக்கு வழி காட்டினுள். தர்மம் என் தலைவாசலில் கின்று என்னத் தட்டி எழுப்பி, 'தகாத் தகட் டில் என் பிணத்தை மாட்டியிருக்கிருயே! இதோ பார்; உருவங்கொண்டு கிற்கிறேன். என்னே ஏற்றுக்கொள்?? என்று எச்சரித்தது. நான் அதை வணங்கினேன்; ஏற்றுக் கொண்டேன். ஏற்றுக்கொண்டதனுல் எனக்குப் பெரு மிதமும் ஆனந்தமும் உண்டாயின. வேள்வி செய்யும் முனிவனே ப்போல, தவம்புரியும் தபஸ்வியைப்போல, விர தம் நோற்கும் பதிவிாதையைப் போல - பிச்சைக்காரியின் குழந்தைக்கு வைத்தியம் செய்துவந்தேன். ரணமும் ஆறி வந்தது: முக்கால்வாசி ஆறிவிட்டதென்றே சொல்லலாம்.

... 2

அவனே அதுவரையில் கான் பார்த்ததில்லை. அவனு டைய தொழிலிலும் வாழ்க்கையிலும் கூட்டாளியாகிய அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/27&oldid=535268" இலிருந்து மீள்விக்கப்பட்டது