பக்கம்:அறுந்த தந்தி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருத புண் 25

பெண் உள்ளம், அதிலும் தாய் உள்ளம், இதை எவ் வளவு நாள் சகித்துக்கொள்ளும்? அவள் தாய்மை ஆவேச வெறி கொண்டது. அதுதான் ஜயித்தது. குழந்தையை என்னிடம் கொண்டு வந்து காட்டினுள். புண்ணும் ஆறி வநதது.

புண் ஆறுவதைக் கண்டு அவள் உள்ளமும் ஆறுதல் அடைந்தது. ஏழைமையின் இரும்புப் பிடிக்குள் மனித உணர்ச்சியே தடைப்பட்டு மாத்துப்போயிருந்த பிச்சைக் காரன் உள்ளத்தில் புதிய புண் கிளம்பியிருந்தது. புண் ஆற ஆற, தன் வியாபாரம் படுத்துப்போகுமே என்று அவன் கவலைப்பட்டான். குழந்தையின் சிரிப்பை அவன் விரும்பவில்லை. அதைக் கதறச் செய்து மனிதர்களைக் தர்மவான்களாக்கவே அவன் எண்ணினன்.

அவன் உள்ளத்துள்ளே பெரிய போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருந்தது. குழந்தையைத் தன் அன்புரு வாகக் காணும்போது புண் ஆறவேண்டும் என்றுதான் அவ னும் கினைத்தான். தன் வறுமையை விளம்பரப்படுத்தும் பலகையாக எண்ணியபோது அது ஆறக்கூடாது என்ற எண்ணம் தலை தூக்கியது. இரண்டுக்கும் போராட்டம். அன்பின் பக்கத்திலே குழந்தையின் தாய் பலமாக இருங் தாள். தொழிலின் சார்பில் வயிற்றுப் பசியும் வறுமையும் படைத்துனேயாக இருந்தன. போராட்டத்தில் வறுமை வென்றது. இந்தப் புண் ஆறக்கூடாது; ஆறிலுைம் மீட்டும் புண் உண்டாக வேண்டும்.’’-இந்த ராகூஸ் எண்ணம் அவன் மனத்தைப் பிடித்து உலுக்கியது; தன் வசமாக்கிவிட்டது. அதன் பயன்தான் அன்று காலையில் ஒரு தகாத்தை எடுத்து ஆறிவந்த காலில் அழுந்தக் கீறிவிட் டான், மகாபாவி!

'சாமி, எனக்கு என்ன தண்டனை வேண்டுமானுலும் விதியுங்கள் ; ஏற்றுக்கொள்கிறேன். சாட்டையை எடுத்து ாத்தவளாாாக அடியுங்கள். பொறுத்துக்கொள்கிறேன். என் உடம்பின்மேல் ரத்தம் பிரிடும்போது அதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/32&oldid=535273" இலிருந்து மீள்விக்கப்பட்டது